http://www.tamiljothy.com/
Wednesday, March 18, 2009
Wednesday, March 11, 2009
பயணங்கள் Payanangal
&
பயணங்கள் Payanangal
syndicated content powered by FeedBurner
...
Reset this favorite; show all Subscribe options
Subscribe Now!
...with web-based news readers. Click your choice below:
...with other readers:
(Choose Your Reader)FeedDemonNetNewsWireNewsFireNewsGator Outlook EditionRSSOwlShrookUniversal Subscription Mechanism (USM)
View Feed XML
FeedBurner makes it easy to receive content updates in My Yahoo!, Newsgator, Bloglines, and other news readers.
Learn more about syndication and FeedBurner...
A message from this feed's publisher: இந்த செய்தியோடை http://www.payanangal.in என்ற தளத்தின் ஓடை. இதை நீங்கள் உங்களுக்கு விருப்பமான செய்தியோடை வாசிக்கும் சேவையில் (feed reader) சேர்த்துக்கொள்ளலாம்.
Current Feed Content
ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 4 : சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism)
Posted: 2009-03-09 20:58:48 UTC-07:00
இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ???
ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1
ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண்
ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். அதன் பின்னரும் புரிவதில் சிரமமிருந்தால் உங்கள் வினாக்களை மறுமொழியில் கேட்கலாம்இனி ஐந்தாவது இடுகை :ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 4 : சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism)கிழ் உள்ள அட்டவனையில் 4 செங்குத்து வரிசைகள் உள்ளன.முதல் செங்குத்து வரிசையில் கூறுகளையும், இரண்டாவது செங்குத்து வரிசையில் ஒரு ஆணின் இயல்புகளையும், நான்காவது செங்குத்து வரிசையில் ஒரு பெண்ணின் இயல்புகளையும், அளித்துள்ளேன்மூன்றாவது செங்குத்து வரிசையில், சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism) உள்ள ஒரு நபரின் இயல்புகள் எப்படி இருக்கும் என்று இருக்கிறது.
ஆண்
????
பெண்
1. மரபணு பால் (Genetic Sex)
அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + ஒரு X மற்றும் ஒரு Y மரபணுச்சரம்
44 + XY
அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + இரு X மரபணுச்சரங்கள்
2. இனஉறுப்புகள்
விரைகள். இருக்கும். அதே போல் விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய் போன்றவைகளும் இருக்கும்.
வயிற்றினுள் விரைகள், விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய்
சினைப்பைகள். அதே போல் பிற முட்டைப் பைக்குழாய், கர்ப்பப்பை, பெண் இனச்சேர்க்கை உறுப்பு போன்றவைகளும் இருக்கும்.
3. நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர்:
அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் ஈஸ்ட்ரஜன் இருக்கும்
அதிக அளவில் ஈஸ்ட்ரஜன் மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன் இருக்கும்
அதிக அளவில் ஈஸ்ட்ரஜன், ப்ரொஜஸ்ட்ரன் போன்றவை மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன்
4. உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள்
ஆண் என்றால் மீசை, தாடி. அது போல் குரலில் வேறுபாடு . இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் ஆண் என்றால் பெண்களை விட அதிக (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். சிறிய இடுப்பெலும்பு (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. மார்பகங்கள் கிடையாது. தோலுக்கு அடியில் கொழுப்பு குறைவு, அதனால் வளைவுகள் இல்லை என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.
பலமில்லா தசைகள், பெண் போல் மார்பு, மீசை குறைவு, தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு
பெண் என்றால் நீண்ட தலைமுடி. அது போல் குரலில் வேறுபாடு . தாடி, மீசை கிடையாது. இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் பெண் என்றால் ஆண்களை விட மெல்லிய (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். பெண் என்றால் ஆணை விட பெரிய இடுப்பெலும்பு. (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. இது தவிர பெண்ணிற்கு மார்பகங்கள், தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு, அதனால் வளைவுகள் என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.
5. ஆண்குறி
ஆண் அளவு
ஆணை விட சிறிது. (ஈடுபாடு இருந்தால்) செயல்பாடு உண்டு
கிடையாது
6. பெண்குறிமூலம்
கிடையாது
கிடையாது
பெண் அளவு
7. பெண் இனச்சேர்க்கை உறுப்பு.
கிடையாது
கிடையாது
பெண் அளவு
8. சிறுநீர் கழிப்பது
ஆண் போல்
ஆண் போல்
பெண் போல்
9. மாதவிடாய்
கிடையாது
கிடையாது
மாதவிடாய் - உண்டு
10. குழந்தை பாக்கியம்
உண்டு
உண்டு (பெண்ணை திருமணம் செய்தால்)
உண்டு
11. உளவியல்:
ஆணாக
சிறிய வயதிலேயே இந்த குறைபாடு வந்துவிட்டால் அவர் உளவியல் ரீதியாக பெண்ணாக இருப்பார். 30 வயதிற்கு மேல் குறைபாடு ஆரம்பித்தது என்றால் ஆனாக இருப்பார். உடலுறவில் ஈடுபடலாம். குழந்தைபாக்கியம் உண்டு
பெண்ணாகநாம் சென்ற இடுகையில் பார்த்த ஹைபோஸ்பேடியாசிஸ் பிரச்சனை மிகவும் சிக்கலானது அவர் (ஹைபோஸ்பேடியாசிஸினால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் ) ஒரு பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறப்பது அரிது. அது போல் உறவிலும் ஈடுபடுவதில் சிக்கல் இருக்கும். உடல் ரீதியாக பல குறைபாடுகள் இருக்கும்.ஆனால் இப்பொழுது பார்க்கும் பிரச்சனை (சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism)) மிக மிக எளிதாக வைத்தியம் பார்க்கவல்லது. இவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால் அதிக ஈஸ்டரஜன் மற்றும் குறைவான டெஸ்டோஸ்டிரோன். அதனால் அவர்களின் உடல்வாகும், (உடல்வாகுடன் இணைந்த குரலும், நடையும், பாவனைகளும்) பெண்போல் மாறிவிடும். அதன் பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாக தங்களை பெண்ணாக உணர ஆரம்பிக்கிறார்கள்.அல்லது வேறு சிலர் முதலில் உளவியல் ரீதியாக தங்களை பெண்ணாக உணர்வார்கள். அதன் பின் அவர்களின் இயக்குநீர் அளவு மாறும்.இந்த இரண்டும் பெரும்பாலும் ”பிறந்தபின் பெற்ற குறைகளே” இவைகளை Acquired Defects என்றழைக்கிறார்கள். நாம் சென்ற இடுகையில் பார்த்த ஹைபோஸ்பேடியாசிஸ் என்பது பிறக்கும் போது கூடவே உடன் வரும் ஒரு பிரச்சனை - அது போன்றவைகளை Congenital defects என்றழைப்பார்கள்இயக்குநீர் பிரச்சனைக்கு (ஹார்மோன் பிராப்ளம்) காரணங்கள் என்ன
அதிக உடல் பருமன்
கல்லீரல் பாதிக்கப்படுதல்
மருந்துகள் (டிஜிடாலிஸ், ஏஸ்ட்ராமஸ்டின், ஸ்பைரினோலாக்டோன், மெதில் டோபா, சிமெடிடின் போன்ற மருந்துகள்)
பசும்பாலில் அதிக அளவு ஈஸ்ட்ரஜன் (மாடு அதிக பால் கறக்க வேண்டுமென்பதற்காக சில பால் வியாபாரிகள் தாங்களே மாட்டிற்கு இயக்குநீர் ஊசி போடுகிறார்கள்)உளவியல் ரீதியாக இந்த பிரச்சனை ஆரம்பிக்க காரணம் என்ன
வளர்ப்பு முறை - சில இடங்களில் பெண் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தைக்கு ஜடை போட்டு, பொட்டு வைத்து, பெண் உடுப்பு எல்லாம் போட்டு அழகு பார்ப்பதன் பின் ஒரு விபரீதம் ஒளிந்துள்ளது என்பதை பலர் அறிவதில்லை
(குடும்பத்தில் உள்ள) பெண்களுடன் மட்டுமே பழகி (ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் இல்லாமல்) வளர்வதால்
சிறு வயதில் ஆண்கள் மேல் வெறுப்பு. சில இடங்களில் பெண்கள் மீது கூட அதீத வெறுப்பினால் இப்படி ஆகலாம் வெறும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீரை அளிப்பது மூலமே இந்த நோயை (அல்லது நிலையை) சரி செய்து உளவியல் ரீதியாக சிகிச்சை அளித்தால் அந்த நபரை ஒரு முழு ஆணாக மாற்றலாம். எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாத நிலை இது. ஒரு பெண்னை திருமணம் செய்தால் குழந்தைபாக்கியம் இருக்கும். அதே போல் ஆண்மைக்குறைவையும் எளிதாக சரி செய்யலாம்.தாம்பத்திய உறவும் திருப்தியாகவே இருக்கும்.ஆனால் சமுகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் இது போன்ற சாதாரணமான நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் குறைபாடு உள்ளவர்கள் கூட (சில ஊசிகள் மற்றும் சில மணி நேர ”அறிவுரை”களால் பூரண குணம் பெறக்கூடியவர்கள் கூட) அறுவை சிகிச்சை செய்து ஆண்குறியை அகற்றி திருநங்கையாகிவிடுகிறார்கள் என்பது சோகமான விஷயம். அடுத்த இடுகை: இயக்குநீர் குறைபாடுகள் குறித்து சில தகவல்களும், இந்த இடுகையில் உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களுக்கு பதிலும் வரும்இதே போல் ஒரு ஆணின் உடல் திடீரென ஒரு பெண்ணின் உடலைப்போல் சில புற்றுநோயகளில் மாறலாம் - அது (புற்று நோய் என்பதால்) சிறிது சிக்கலான விஷயம். அறுவை சிகிச்சை தேவை. அது குறித்து இனி வரும் இடுகையில் காண்போம்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை “பயணங்கள” என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
கல்லூரி நினைவுகள் 2 - யாருடா அந்த பொண்ணு !!
Posted: 2009-03-09 06:07:26 UTC-07:00
முன்கதை :கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டுநான் இறுதி வரிசைக்கு மூன்று வரிசைகளுக்கு முன் வரிசையில் உட்கார்ந்து அந்த சாளரம் வழியாக வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்து கொண்டே (நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூந்து பயணத்தில் வீசும் காற்று எப்படி இருக்கும் என்று அனுபவப்பட்டவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்) வாக்மேனில் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.“ஒரு விதை உயிர் கொண்டது, இரு நெஞ்சில் வேர் கொண்டது” “மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில் கவிதை அரங்கேறும்” போன்ற வைரவரிகளை ரசித்து கொண்டிருந்த போது எனக்கு பின்னால் அந்த சத்தம் கேட்டதுதொப், தொம், “தேரி மா கி.......”நான் வாக்மேனின் காதுகேள் பொறியை (இயர் போன்) மாட்டியிருந்ததாலோ அல்லது பாடலில் லயித்திருந்ததாலோ சத்தம் வரும் திசையை நோக்கி திரும்ப சிறிது நேரமாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.திரும்பி பார்த்தால் இரண்டு மாணவர்கள் உருண்டு, புரண்டு, மாறி மாறி அடித்து, உதைத்து, குத்தி, கத்தி ஒரே களேபாரம். இருவரும் தமிழர்கள் இல்லை என்பதி நீங்கள் அவர்கள் பயன்படுத்திய வார்த்தையை வைத்தே கண்டு பிடித்திருப்பீர்கள்தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் மாநில அரசால் நிரப்பப்படுவது கிடையாது. இதில் 15 % இடங்களுக்கான மாணவர்கள் மத்திய அரசால் நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் (தற்சமயம் மத்திய அரசின் சி.பி.எஸ்.சி இந்த தேர்வை நடத்துகிறது.) மீதி 85 % இடங்கள் மட்டுமே மாநில அரசால் (சுகாதார துறையின் கீழ் இடங்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தால்) நிரப்பப்படுகிறது. இந்த 15 சதவிகிதத்தில் பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே வருவார்கள். தமிழ் நாட்டு மாணவர்கள் மிகவும் குறைவு தான். இதற்கு பல காரணங்கள்
அந்த நுழைவுத்தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்.
இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் சூட்சுமங்களை பீகார், மத்திய பிரதேச மற்றும் உத்திரப்பிரதேச காரர்கள் அறிந்திருப்பது (இதற்கு மேல் வெளிப்படையாக கூற முடியாது. புரிந்து கொள்ளுங்கள்!!!)மொத்தமாக தமிழகத்தில் சுமார் 1875 இளங்கலை மருத்துவ இடங்கள் இருக்கின்றன. இதில் 1595 மாநில அரசிற்கு. 280 மத்திய அரசிற்கு. (இந்த எண்ணிக்கை சிறிது மாறலாம்) இப்படியாக எங்களுடன் 12 வட இந்தியர்கள் படித்து வந்தார்கள். அவர்களில் இருவர் தான் அன்று பேரூந்தில் அடித்துக்கொண்டதுநானும் அருகிலிருந்த மற்றவர்களும் இருவரையும் விலக்கி, ஒருவனை கடைசிவரிசையில் இடப்புற ஓரத்திலும், அடுத்தவனை கடைசிக்கு முன்வரிசை வலப்புற ஓரத்திலும் அமர வைத்து விட்டு இடத்தில் வந்து உட்காரவும், எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த எங்கள் மருந்தியல் விரிவுரையாளர் கேட்டார் “யாருப்பா இப்படி அடிச்சுகிட்டது”“சார் தினேஷும், படோலாவும் சார்”“நார்தி பசங்களா” (வட இந்திய மாணவர்களை குறிக்க மருத்துவக்கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் சொல்)“ஆமாம் சார்”அப்படியே திரும்பியவர், வேறு யாராவது வட இந்திய பசங்கள் இருக்கிறார்களா என்று தேடியதில் எனக்கு வலது புறம் அமர்ந்திருந்த விவேக் லால் கண்ணில் பட்டான். (இன்று மரு.விவேக் லால் காச நோய் தடுப்பு திட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல ஆலோசகர்)“கண்னா லால்”“யெஸ் சார்” என்று பவ்யமாக கூறியபடி மெதுவாக எழுந்தான்.“யாருடா அந்த பொண்ணு”“நோ சார், ஐ டோண்ட் திங்க திஸ் பைட் வாஸ் பார் எ கேர்ள் சார்” (இல்லை சார். இந்த சண்டை பொண்ணு மேட்டர் இல்லை என்று நினைக்கிறேன்) என்று திக்கி திணறி சமாளித்தாலும் அவன் திரு திரு என்று முழித்து (எப்படி இவர் சரியாக கண்டுபிடித்தார் என்று) அதிர்ச்சியில் சிலையாக நின்றது இன்று வரை எனக்கு ஞாபகம் இருக்கிறது“லால் பையா, உன் வயசென்ன... இருபதா, இருபத்தொன்னா.. நீ பொறக்குறதுக்கு முன்னாலயே நான் பசங்கள கூட்டி ஊட்டிக்கும், சிம்லாவுக்கும் போயிருக்கேன். முப்பது வருசமா நான் பசங்க கூட டூர் போறேன் தெரியுமா”விவேக் ஆச்சரியமும் சிறிது அசடுமாக பேந்த பேந்த முழிக்கிறான்“ஏண்டா டூர் வந்த இடத்தில் இரண்டு பேரும் எதுக்குடா அடிச்சுவாங்க, வரப்பு தகராறா இல்லை ஈரான் ஈராக் பிரச்சனையா. சொல்லுடா யார்டா அந்த பொண்ணு”விவேக் முகத்தில் லிட்டர் லிட்டராக வழிசல் “சரி, திரும்ப போய் சேர்ற வரைக்கும் இரண்டு பேரும் ஒழுங்க இருக்கணும். இல்லை பாதி டூர்னு பாக்காம இங்க இருந்து மூணு டிக்கெட் எடுத்து இரண்டு பேரையும் நானேகூட்டிகிட்டு போய் காலேஜ்ல விட்டுருவேன்.”சண்டை போட்ட படோலாவும் தினேஷும் உர் என்று முகத்தை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். படோலாவின் சட்டையில் இரு பொத்தான்களை காணவில்லை. தினேஷோ கையை உதறிக்கொண்டிருக்கிறான்.என்னடா ஆச்சு என்று கையை பார்த்தால் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியிடம் அடி வாங்கிய டாமின் மண்டை வீங்குமே அது போல் வலது கை மணிக்கட்டு பகுதி புஸ் என்று வீங்கியிருந்தது... தொடரும்பதிவர் குசும்பன் கவனத்திற்கு : வலது ஓரம் நான். எனக்கு அடுத்து வெள்ளைசட்டையுடன் இருப்பது இந்த இடுகையில் நான் குறிப்பிட்ட எங்களுடன் வந்த விரிவுரையாளர். இடது பக்கம் நிற்கும் ராஜ்குமாரும், பிரதீப்பும் என் வகுப்பு தோழர்கள் (இன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்) இந்த படம் இதே சுற்றுலாவில் எடுக்கப்பட்டது தான் !!

கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டு
Posted: 2009-03-08 20:34:41 UTC-07:00
ஒரு செப்டம்பர் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்த தர்மபுரி-ஓசூர் நெடுஞ்சாலையில் நான்காம் ஆண்டு மாணவர்கள், மாணவிகள், மற்றும் ஆசிரியர்களுடன் அந்த பேரூந்து சீராக சென்று கொண்டிருந்த போது இந்த கதை துவங்குகிறது.ஆறு வருட மருத்துவ இளங்கலை படிப்பில் நான்காவது ஆண்டின் முதல் ஆறு மாதங்களை “இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டு” (ப்ரி பைனல் இயர்) என்பார்கள். நான்காம் ஆண்டின் இரண்டாவது 6 மாதங்களும், ஐந்தாம் ஆண்டும் “இறுதி ஆண்டு” (பைனல் இயர்) என்று அழைக்கப்படும்இந்த ஆறு மாதங்களில் காது மூக்கு தொண்டை மருத்துவம் ஒரு மாதம், கண் மருத்துவம் ஒரு மாதம், சட்டம்சார் மருத்துவம் ஒரு மாதம், சமூக மருத்துவம் (பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவம்) ஒரு மாதம், மனநல மருத்துவம் ஒரு மாதம் மற்றும் தேர்வு விடுமுறை ஒரு மாதம் என்று மருத்துவ இளங்கலை படிக்கும் ஆறு வருடங்களில் குறைந்த அளவு படிக்க வேண்டியது இந்த ஆறு மாதங்களில் தான். அது தவிர பெரும்பாலான கல்லூரிகளில் காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம் ஆகிய இரு பிரிவுகளிலும் செய்முறை தேர்வில் தேர்வாவதும் எளிது தான்.மேலும் கல்லூரியில் சேர்ந்து மூன்று வருடம் முடிந்த நிலையில், மேலும் மூன்று வருடம் படிப்பு பாக்கி இருக்கும் ஒரு இடைப்பட்ட நேரம் இது. (கலைக்கல்லூரிகளில் இளங்கலை இரண்டாவது வருடத்தை போல்)அது தவிர சட்டம் சார் மருத்துவம் படிக்கும் போது தூப்பாக்கி சுடுவது, தோட்டா எந்த வகை துப்பாக்கி (ரைபிளா, பிஸ்டலா) என்று எப்படி கண்டுபிடிப்பது, எலும்பை வைத்து ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிப்பது எப்படி போன்ற சுவாரசியமான விஷயங்களை சொல்லி தருவதும் இந்த சமயத்தில் தான்அதே போல் சமூக மருத்துவ படிப்பின் ஒரு அங்கமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், பால் பதப்படுத்தும் நிலையம், உணவு கலப்பட ஆய்வு கூடங்கள், நகராட்சி மருத்துவ நிலையங்கள், காச நோய் திட்டம், நீர் சுத்திகரிப்பு மற்றும் நீரேற்று நிலையங்கள் என்று பல இடங்களுக்கும் அழைத்து செல்வார்கள். காலை அங்கு சென்ற பின்னர், கல்லூரி வாகன ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் மதியம் பிரியாணி வாங்கி கொடுத்து, எங்கள் காசில் கூடுதல் டீசல் போட்டு, உடன் வரும் ஆசிரியரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிகூத்தாடி பிற்பகல் அப்படியே வண்டியை குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு என்று திருப்பி விடுவோம்.இறுதி ஆண்டின் போது பல பிரிவுகளாக பிரித்து செயல்முறை வகுப்பு நடப்பதால் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வது கடினம். இறுதி ஆண்டிலும், அதன் பிறகு பயிற்சி மருத்துவராக இருக்கும் போதும் பெரும்பாலும் அந்த பிரிவை சேர்ந்தவர்களே (அந்த பிரிவு பேராசிரியர், ஆசிரியர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என்று) சுற்றுலா செல்வார்கள. இதை “யூனிட் டூர்” என்று கூறுவது உண்டு. எனவே மருத்துவ கல்லூரி வாசத்தில் மொத்த வகுப்பும் ஒன்று சேர்ந்து செல்லும் கடைசி சுற்றுலா என்றால் அது நான்காம் ஆண்டு செல்வது தான்.எங்கள் நான்காம் ஆண்டு சுற்றுலாவிற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் பெங்களூர் - மைசூர் - ஊட்டி. ஒரு நாள் பெங்களூர், இரண்டாம் நாள் மைசூர், இறுதியில் ஊட்டி என்று தீர்மானித்து முதலில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.கல்லூரி சுற்றுலா செல்பவர்கள் கிளம்வதற்கென்ற காலம் காலமாக கடை பிடிக்கப்படும் நல்ல நேரமான வெள்ளி இரவு கிளம்பி பேரூந்து புறப்பட்ட உடனே ஆட்டம் ஆட துவங்கி கிட்டத்தட்ட மதுரை வரும் வரை டேப்பில் ஒலித்த அனைத்துப் பாடல்களுக்கும் நடனம் என்ற பெயரில் கையையும் காலையும் அங்கும் இங்கும் ஆட்டி ஒரே ஆட்டம் தான். அப்பொழுது ஹிட் ஆகியிருந்த “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடல் டேப்பில் ஓடிய போது கூட நடனம் ஆடினார்கள் என்றால் உற்சாகம் எந்த அளவு என்று ஊகித்து கொள்ளுங்கள்ஆடி களைத்து தூங்கி அடுத்த நாள் காலை தர்மபுரி தாண்டி பேரூந்து சென்று கொண்டிருந்தது. முன்வரிசை இருக்கைகளில் மாணவிகள். பின் வரிசைகளின் மாணவர்கள். நான் இறுதி வரிசைக்கு மூன்று வரிசைகளுக்கு முன் வரிசையில் உட்கார்ந்து அந்த சாளரம் வழியாக வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்து கொண்டே (நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூந்து பயணத்தில் வீசும் காற்று எப்படி இருக்கும் என்று அனுபவப்பட்டவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்) வாக்மேனில் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.“ஒரு விதை உயிர் கொண்டது, இரு நெஞ்சில் வேர் கொண்டது” “மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில் கவிதை அரங்கேறும்” போன்ற வைரவரிகளை ரசித்து கொண்டிருந்த போது எனக்கு பின்னால் அந்த சத்தம் கேட்டதுதொப், தொம், “தேரி மா கி.......”.... தொடர்ந்து வாசிக்ககல்லூரி நினைவுகள் 2 - யாருடா அந்த பொண்ணு !!

தமிழ்மணம் விருதுகள் 2008 - வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல
Posted: 2009-02-26 22:02:10 UTC-08:00
இன்று வெளியிடப்பட்ட தமிழ் மணம் விருதுகள் 2008 முடிவுகளின் படி பயணங்கள் வலைப்பதிவில் இருக்கும் மூன்று கட்டுரைகள் மூன்று பிரிவுகளில் முதலிடத்தை பெற்றுள்ளனபிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
பயணங்கள் Payanangal - புருனோ Bruno : * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க
ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல் : என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்
பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
பயணங்கள் - புருனோ Bruno : மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்
உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன் : என் இனிய சுஜாதா
பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
பயணங்கள் - புருனோ Bruno : தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
பல்சுவை! - SP.VR. SUBBIAH : Star Posting செட்டிநாட்டு வீடுகள்
வாக்களித்தவர்கள் அனைவருக்கும், தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும் நன்றிகள் பல

புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ???
Posted: 2009-02-18 21:37:58 UTC-08:00
புத்தகம், காப்புரிமை பற்றி சில தகவல்களை பார்ப்போம். உதாரணத்திற்கு பதிவர் லக்கியின்(எழுத்தாளர் யுவகிருஷ்ணா)வின் “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் ” புத்தகத்தை எடுத்துக்கொள்வோம்
இந்த புத்தகத்தை எழுதியது யார் : யுவகிருஷ்ணாவெளியிடுவது யார் : கிழக்கு பதிப்பகம் இதில் லாபம் எப்படி வரும் :புத்தகம் எழுதும், தட்டச்சு செய்யும், வடிவமைக்கும், அச்சிடும், விளம்பரப்படுத்தும், விநியோகிக்கும் செலவு (தள்ளுபடி தரும் பணம்) போக மீதி இருக்கும் பணம் தான் லாபம்லாபத்தில் யாருக்கு பங்கு :இதில் பதிப்பகத்திற்கும் நூலாசிரியருக்கும் பங்குஇப்பொழுது இந்த புத்தகத்தை கிழக்கு மட்டும் தான் வெளியிடமுடியும். யாருக்காவது இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றால் கிழக்கில் மட்டும் தான் வாங்கி படிக்க முடியும்.வேறு பதிப்பகங்கள் வெளியிட முடியாது (அனுமதி இல்லாமல் அச்சிடக்கூட முடியாது)சரி, நாட்டுடைமை என்றால் என்ன :நாட்டுடைமை என்றால் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை யுவகிருஷ்ணாவிற்கு அளித்து அவரது புத்தகங்களை யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்கலாம் என்று ஆணை பிறப்பிப்பதுஅப்படி ஆணை பிறப்பித்தபின் என்னவாகும் : நான் அதே புத்தகத்தை மேப் லித்தோ காகிதத்தில் அச்சிட்டு ஒரு புத்தகம் 300 ரூபாய் என்று விற்கலாம். நீங்கள் அதை தங்க நிற மையில் அச்சிட்டு ஒரு புத்தகம் 1000 ரூபாய் என்று விற்கலாம். அசோகன் சார் அதை ”பாக்கெட் நாவலா”க தரலாம். அப்படி புத்தகத்தை அச்சிடும் யாரும் யுவகிருஷ்ணாவிற்கு பணம் அளிக்க வேண்டாம் !!இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) எழுத்தாளருக்கு (இந்த உதாரணத்தில் யுவகிருஷ்ணாவிற்கு) லாபமா நஷ்டமா : அது அரசு தரும் பணம் மற்றும் இது வரை அவரது புத்தகம் விற்கும் அளவை பொருத்தது.உதாரணமாகஅவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 லட்சம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு லாபமேஆனால்
அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 கோடி வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு நஷ்டமே
இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) அரசிற்கு வரவா, செலவா : கண்டிப்பாக செலவு தான்
பிறகு ஏன் அரசாங்கம் இப்படி புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் : இரு காரணங்கள்
1. அந்த புத்தகம் நல்ல புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்
2. எழுத்தாளருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம்
புத்தகம் நாட்டுடைமையாக்க பொதுவாக கடைபிடிக்கப்படும் நடைமுறை என்ன.புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதால் அரசிற்கு எந்த வருவாயும் கிடையாது. செலவு மட்டும் தான். எனவே இந்த செலவை செய்வதற்கு அரசு சட்டசபையில் ஒப்புதல் வாங்க வேண்டும்சட்டசபையில் ஓப்புதல் வாங்காமல் செலவு செய்ய முடியாதாஒரு அரசானது நினைத்து போல் செலவு செய்து விட முடியாது. அடுத்த நிதியாண்டில் தமிழக அரசு என்னென்ன செலவு செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக வருவாய் எப்படி வரும் என்பது குறித்து தமிழக அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை ஒன்றை சட்டசபையில் சமர்பிப்பார். அதை உறுப்பினர் ஏற்றுக்கொண்டபின்னர் 01.04.2009 முதல் 31.03.2010 வரை உள்ள செலவுகள் இதன் அடிப்படையில் தான் நடைபெறும்.புத்தகம் நாட்டுடைமையாக்க மட்டும் ஏன் இப்படி
புத்தகங்களை நாட்டுடைமையாக்க மட்டும் அல்ல. அரசின் அனைத்து செலவுகளும் அந்த அறிக்கையில் இருக்கும்.
இந்த வருட அறிக்கையில் இருக்கும் சில உதாரணங்கள்
தமிழகத்தில் வரும் நிதியாண்டு முதல் கூட்டுறவுப் பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும், இனிமேல் வட்டி கிடையவே கிடையாது. அந்த வட்டித் தொகையை அரசே செலுத்திவிடும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பதற்காக, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோத்தயம் கிராமத்தில், சுமார் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நல்லதங்காள் ஓடைக்குக் குறுக்கே அணை ஒன்று அமைக்கப்படும்
வரும் நிதியாண்டில் மேலும் 2,500 நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்க ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நமது மாநிலத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செய்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான புதிய திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வரும் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்
நிதி அமைச்சர் அறிவித்து விட்டாரே, அப்படியானால் மாணவர்களுக்கு நாளையே கண்ணாடி வழங்கி விடுவார்களா
நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பின் அது குறித்து விவாதம் நடைபெறும். சபை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த அறிக்கை இறுதி வடிவம் பெறும்.
உதாரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிதி ஒதுக்கப்படும் (அதனால் வேறு ஏதாவது திட்டத்திற்கு அளிக்கப்பட்ட நிதி குறையலாம்)
மாணவர்களுக்கு இவ்வளவு கோடி ஒதுக்கப்படுகிறது என்று மட்டும் அனுமதி வாங்கி பின்னர் அந்த பணத்திற்கு கண்ணாடியோ காது கேட்கும் கருவியோ வாங்கினால் என்ன
மக்களாட்சி எனபதன் கோட்பாடே மக்களின் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்வது தானே தவிர அதிகாரிகள் முடிவு செய்வது அல்ல என்பதால் தான் இந்த விபரங்கள் நிதி நிலை அறிக்கையில் வருகிறது
நாட்டுடமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது” என்று ஒரு கருத்து உள்ளதே
அப்படி செய்யலாம். ஆனால் அதில் நம்பகத்தன்மை குறைவு. மேலும் அப்படி செய்வது மக்களாட்சியின் அடிப்படைக்கு விரோதமான செயல்
புத்தகங்களை நாட்டுடைமையாக்க 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறிவிட்டு எந்த புத்தகங்கள் என்று பின்னர் தீர்மாணிக்க முடியாதா
முடியும். ஆனால் அது தார்மிக ரீதியாக சரியான செயல் அல்ல.
பின்னர் ஏன் அப்படி செய்யாமல் ஆசிரியர்களின் பெயரை நிதிநிலை அறிக்கையில் கூறுகிறார்கள்
யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றன (யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படவில்லை !!) என்ற முடிவை அந்த துறையில் உள்ள ஒரு அதிகாரி எடுப்பதற்கு பதிலாக மக்களாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் எடுப்பது தான் மக்களாட்சி என்பதால் அந்த பெயர்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுகின்றன
உதாரணமாக 25 லட்சம் செலவழித்து யுவகிருஷ்ணாவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதற்கு பதிலாக டேவிட் மெக்கின்சி ஒகில்வியின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று உறுப்பினர்களில் பலரும் கருத்து தெரிவித்தால் யுவகிருஷ்ணாவின் எழுத்துக்களுக்கு பதில் ஒகில்வியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்படலாம்
சரி, கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பெயரை நேற்று நிதிஅமைசச்ர் அறிவித்தாரே. நான் இன்று இரவு அவரது புத்தகங்கள் இரண்டை அச்சிட்டு நாளை சாந்தி திரையரங்கு முன்னால் விற்கலாமா
நன்றாக் கவனியுங்கள். கவிஞர் அழ.வள்ளியப்பாவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி மட்டும் தான் கோரப்பட்டுள்ளது. இப்பொழுது நிதிஅமைச்சர் என்ன கூறியுள்ளார் என்று மறுபடியும் பாருங்கள்
நலன் பல குவிக்கும் நிதிநிலை அறிக்கையை அவையின் ஒப்புதலுக்காக இந்த அரசு முன்வைக்கிறது.
அப்படி என்றால் சட்ட சபை அனுமதி அளித்த பின்னர் தான் என்னால் அந்த புத்தகங்களை அச்சிட முடியுமா
சட்ட சபை அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் சட்ட சபை அனுமதி அளித்தால் மட்டும் போதாது
பிறகு என்ன வேண்டும்
முதலில் சட்டசபையில் இதற்கான அனுமதியை பெற வேண்டும்
அதன் பிறகு இதற்கான துறையிலிருந்து அந்த ஆசிரியரை தொடர்பு கொள்வார்கள். அல்லது ஆசிரியரின் குடும்பத்தினரை அல்லது வாரிசுகளை
எதற்கு
அவர்களிடமிருந்து அந்த உரிமங்களை முறைப்படி பெற
சட்ட சபையில் அறிவித்த பின்னர் அந்த ஆசிரியரின் வாரிசுகள் மறுக்க முடியுமா
கண்டிப்பாக மறுக்கலாம். சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை
இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது
சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும். அதன் பின்னர்தான் நீங்களோ நானோ அந்த புத்தகங்களை அச்சிடலாம்
இது குறித்த அரசின் நிலை
இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.
நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.
உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.
ஒரு வேளை சட்டசபையில் ஒரு ஆசிரியரின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க கடும் எதிர்ப்பு வருகிறது. அப்படியானால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள மாட்டார்களா
ஒரு வேளை அனைத்து உறுப்பினர்களும் எதிர்க்கும் பட்சத்தில் அந்த ஆசிரியரின் நூல்களை நாட்டுடைமையாக்க சபை அனுமதி வழங்கவில்லை என்றால் ”அவையின் ஒப்புதலுக்காக அரசு முன்வைத்த போது” ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு அந்த ஆசிரியரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்க நிதி அனுமதி இல்லை என்பதால் அவரது குடும்பத்தின்ரை தொடர்பு கொள்ள மாட்டார்கள்
குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அதன் பிறகு சட்டசபையின் ஒப்புதலுக்கு வைத்தால் என்ன
தமிழ் எழுத்தாளர்களில் வெகு சிலரே கோடிஸ்வரர்கள் !!! ஏனைய எழுத்தாளர்களின் நிதி நிலைமை மெச்சும் படி இல்லை.
இப்படி இருக்கும் போது ஒரு எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் வந்து பணம் தருகிறேன் (அதற்கு அனுமதி தாருங்கள்) என்று கூறிவிட்டு ஏதாவது காரணத்தால் அந்த வருடமோ அல்லது அதன் பின்னரோ நிதி ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பத்தினரின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசித்தீர்களா
அதனால் தான் நிதி ஓதுக்கீடு முடிந்த பின்னர் அனுமதி கேட்கிறார்கள். குடும்பத்தினர் அனுமதி அளித்தால் 100 சதம் அவர்களுக்கு பணம் தரலாம் என்ற உத்திரவாதம் இருக்கிறதல்லவா
உங்களுக்கு அடுத்த மாதம் சிறிது பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வருவது உறுதியில்லை. உங்கள் மகனோ மகளோ ஒரு பொருள் கேட்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்வீர்கள்
1. பணம் வந்த பின்னர் பணத்துடன் மகனை / மகளை கடைக்கு அழைத்து செல்வீர்களா
அல்லது
2. பணம் வருவது உறுதியில்லை என்று தெரிந்தும் மகனை கடைக்கு அழைத்து சென்று காட்டி தேர்ந்தெடுக்க சொல்வீர்களா
அரசு (ஏழ்மையில் இருக்கும் ஒரு எழுத்தாளரின் குடும்பத்திற்கு) என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்
இது குறித்து பதிவர் பத்ரியின் அவர்கள் ஒரு பதிவு (நாட்டுடமை குழப்பம் ) எழுதியுள்ளார். அதில் உள்ள சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவை குறித்த என் கருத்துக்கள்
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம். அரசு, இது எப்போதும் தாங்கள் செய்யும் ஒன்றுதான் என்றும், மரபுரிமை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் வற்புறுத்தமாட்டோம் என்றும் சொல்வது அபத்தம்.//மன்னிக்க வேண்டும்இதில் அபத்தம் எதுவும் இல்லை என்பது என் கருத்துநேற்று வெளியிடப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை. இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது. இதை அபத்தம் என்று கூறுவது என்னைப்பொருத்த வரையில் ஏற்புடையது அல்லசம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும். இப்படி நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் தான் அந்த துறையிலிருந்து அந்த ஆசிரியரின் குடும்பத்தினரை / வாரிசுகளை தொடர்பு கொண்டு சம்மதம் கேட்பார்கள். அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த எழுத்தாளரை தேடிபோய்விடுவார்கள் (இந்த வருடம் அல்லது அடுத்த வருடம்)உண்மையில் அபத்தம் என்னவென்றால் இப்படி அரசிடமிருந்து தனிப்பட்ட கடிதம் வரும் வரை காத்திருக்காமல் இருவர் நேற்று விளம்பரம் தேடியது தான்.
//இது ஓர் opt-out முறையாக இருக்கக்கூடாது. Opt-in ஆக இருக்கவேண்டும்.//இது எப்படி opt-out ஆகியது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் தனிப்பட்ட அனுமதி வாங்கப்பட்ட பின்னரே ஆணை வெளியிடப்படும். ஆக அரசுடைமை என்பது opt in முறையிலேயே நடக்கிறது.
//3. அரசு ஒருவருடைய நூலை நாட்டுடமையாக்க முடிவெடுத்தால், முதலில் மரபுரிமை உள்ளவர்களை அணுகவேண்டும். பேச்சளவில் அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபின்னரே அவர்களது பெயர்களை வெளிவிட வேண்டும்.//இந்த நடைமுறை தான் இப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்குவதற்கு அனுமதி கோரப்பட்டதை வைத்து ஏதோ புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது போல் ஊடகங்களும் பதிவர்களும் ஏன் எழுதுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கப்படாமல் எப்படி அந்த துறை அதிகாரி அந்த வாரிசு தாரருடன் பேச முடியும். நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு 10 கணினி வாங்க வேண்டுமென்றால் அதற்கான பணம் ஒதுக்கப்படுமுன்னரே கணினி நிறுவனத்துடன் பேச உங்கள் ஊழியருக்கு அனுமதி உண்டா
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம்.//உண்மை. ஆனால் குழப்பம் விளைவித்தது அரசல்ல. இருவரின் வாரிசுகளே என்பது தான் நிஜம்.

செந்தமிழில் பயணச்சீட்டு - இன்பத்தேன் பாயுதே !!
Posted: 2009-02-15 06:17:30 UTC-08:00
தமிழக அரசு போக்குவரத்து கழக பேரூந்துகளில் தற்சமயம் சிறு கையடக்க மின்பொறி மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்த பயணச்சீட்டுக்கள் ஆங்கிலத்தில் இருந்தன.தற்பொழுது நடத்துனர்களுக்கு புதிதாக வழங்கப்படும் இயந்திரங்கள் தமிழில் பயணச்சீட்டு வழங்கும்படி இருக்கிறது. விரைவில் அனைத்து பேரூந்துகளிலும் தமிழில் பயணச்சீட்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்
அரசு கழக பயணச்சீட்டு நடைமுறையை மாற்றுவது என்பது ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் பார்வையாளர் அனுமதி சீட்டை மாற்றுவது போல் எளிதான ஒரே நாளில் முடியக்கூடிய காரியம் அல்ல என்பதை பலர் அறிவதில்லை. அதனால் தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் பயணச்சீட்டு ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து சில விமர்சணங்கள் வந்தன.
எந்த ஒரு அரசு திட்டமும் முதலில் ஒரு சிறு பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பிறகு தான் விரிவு படுத்தப்படும். அப்படி நடைமுறைப்படுத்தப்படும் போது (Pilot - முன்னோட்டம்) பொதுவாக ஒரிரு கருவிகளையே வாங்குவார்கள். அப்படி வாங்கும் போது, அந்த கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் / நிறுவனங்கள் அந்த கருவியின் அமைப்பை (இந்த உதாரணத்தில் அச்சிடப்படும் மொழியை) மாற்றி வழங்கிவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.அப்படியே அவர்கள் அமைப்பை மாற்றி வழங்கினாலும் அதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன
அமைப்பில் மாற்றம் செய்ய அதிக பணம் தேவைப்படும். உதாரணமாக 1000 ரூபாய்க்கு விற்கப்படும் ஆங்கில பொறியை நாம் வாங்கும் போது வெறும் 5 (அல்லது 10) கருவிகளை மட்டும் வாங்கி அதில் ஆங்கிலத்திற்கு பதில் தமிழ் வேண்டுமென்றால் அந்த நிறுவனம் சம்மதிக்காது. விலை அதிகம் கேட்பார்கள்
கடையில் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் கருவியை 1200 ரூபாய்க்கு ஒரு அரசு அதிகாரி (அதிக விலை அளித்து) வாங்கினால் உடனே ஊழல் என்று கூப்பாடு எழும். எனவே யாரும் இந்த முயல தயங்குவார்கள்
அதே நேரம், முன்னோட்டம் முடிந்து திட்டம் விரிவுபடுத்தப்படும் போது பல ஆயிரம் கருவிகள் வாங்கப்படுவதால் (கருவி விற்கும்) நிறுவனத்துடன் பேசி) அதே விலையில் பெறலாம்
அமைப்பை மாற்ற அதிக நேரம் தேவைப்படலாம். இதனால் முன்னோட்டம் ஆரம்பிப்பது தாமதமாகும் --> முன்னோட்டம் முடிவது தாமதமாகும் --> திட்ட நடைமுறையும் தாமதமாகும்
இதை விட முக்கியமான விஷயம் --> அந்த நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் வாடிக்கையாளருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு (மென்பொருள் ஆதரவு குழு - support team வேறு பதம் தெரிவிக்கவும்) தமிழ் தெரிய வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை கருவியிலா, அல்லது பயன்படுத்துபவரிடமா என்பதும் யாருக்கும் தெரியாது. இங்கும் முன்னர் சொன்னது போல் 5 கருவி வாங்கும் போது தமிழ் தெரிந்த ஆதரவு குழு வேண்டுமென்று நாம் கேட்க முடியாது. அதே நேரம் 1000 கருவி வாங்கும் போது கேட்கலாம் இது போன்ற நடைமுறை பிரச்சனைகளால் / சிக்கல்களால் தான் பல அரசு திட்டங்கள் - முக்கியமாக கணினி சார் / தொழிற்நுட்பம் சார் திட்டங்கள் - அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலத்தில் இருந்து பின்னர் விரிவுபடுத்தப்படும் போது தமிழில் மாறுகின்றனதற்சமயம் நியாய விலைக்கடைகளில் இது போல் கையடக்க கருவி மூலம் பொருட்களின் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுகாதார துறையில் தாம்பரம், சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர், பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய மருத்துவமனைகளில் மருந்து சீட்டுக்கள் கணினியில் அச்சிட்டப்பட்டு வழங்கப்படுகின்றன.இவை அனைத்தும் முன்னோட்ட திட்டங்களே. எனவே இங்கு வழங்கப்படும் சீட்டுகளில் ஆங்கிலம் இருக்கலாம்.முன்னோட்ட திட்டங்களில் ஏற்படும் சிக்கல்களை களைந்து இத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் போது ஆங்கிலத்திற்கு பதில் தமிழ் இடம்பெறும்.அதற்கு முன்னர் தமிழ் யூனிகோட் - டியூன் சிக்கல் முடிவிற்கு வருவது நலம் :) :)

பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்?
Posted: 2009-02-15 03:23:41 UTC-08:00
http://tvpravi.blogspot.com/2008/12/blog-post_9180.html பதிவில் எழுப்பட்ட வினாவிற்கு ஒரு சிறு விளக்கம்வினா 1 : பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்?விடை 1 : ஒவ்வொரு குடிமகனுக்காகவும் அரசு தகவல் தொழிற்நுட்ப துறைக்காக செலவழிக்கும் தொகை.
per capita - பெர் கேப்பிட்டா - ஒவ்வொருவருக்கும்
IT - ஐடி - தகவல் தொழிற்நுட்பம்
Spending - ஸ்பெண்டிங் - செலவு வினா 2 : அது ஏன் தமிழ் நாட்டில் அதல பாதாளத்துல இருக்கு?விடை 2 : இதற்கு விளக்கமளிக்கும் முன்னர் முக்கிய விஷயத்தை ஞாபகத்தில் வைக்க வேண்டும் - தகவல் தொழிற்நுட்ப துறையில் தமிழ் நாடு நம்பர் 1 இடத்தில் தான் இருக்கிறதுஒரு சிறு கதைமூன்று குழுக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்குழு 1, குழு 2 , குழு 3--ஒவ்வொரு குழுவிலும் 5 பேர்--ஆக 15 பேரும் காலை சாப்பாடு வாங்க ஒவ்வொரு குழுவிலும் ஒருவரை அனுப்புகிறார்கள்--இப்பொழுது குழு 1ல் சாப்பாடு வாங்கப்போனவர் 150 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 5 இட்லி வாங்கி வருகிறார்--குழு 2ல் சாப்பாடு வாங்கப்போனவர் 200 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 10 இட்லி வாங்கி வருகிறார்--குழு 3ல் சாப்பாடு வாங்கப்போனவர் 100 ரூபாய் செலவழித்து ஆளுக்கு 10 இட்லி வாங்கி வருகிறார்--இதில் பெர் கேப்பிட்டா இட்லி ஸ்பென்டிங் (ஒவ்வொருவருக்கும் இட்லி வாங்க எவ்வளவு செலவு) என்றால் குழு 1 - 30குழு 2 - 40குழு 3 - 20குழு 1 மற்றும் குழு 2 ஆகியவற்றை ஒப்பிடுகையில் குழு 3 அதல பாதாளத்தில் இருக்கிறது : ஏனென்றால் குழு 3ல் சாப்பாடு வாங்க போனவர் (அவர் பணத்தை ”சாப்பிடாமல்” - அல்லது ”குறைவான பணத்தை மட்டும் சாப்பிட்டு” !!!) அதிக அளவு இட்லி வாங்குகிறார்இதில் மேலும் பெர் இட்லி ஸ்பெண்டிங் (ஒரு இட்லிக்கு செலவு) என்று பார்த்தால்குழு 1 - 6
குழு 2 - 4
குழு 3 - 2
புரிய வில்லை என்றால் சந்தேகங்களை கேட்கலாம்.மறுமொழியில் வந்த ஒரு சந்தேகம்
புருனோ,எந்த ஒரு புள்ளி விவரத்தையும் நமக்கு சாதகமாக சொல்லிக்கொள்ள முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம். பெர் கேப்பிடா ஐடி ஸ்பென்டிங் அதிகமாக இருந்தால் நாங்கள் அதிகம் செலவழிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளலாம், குறைவாக இருந்தால் நாங்கள் குறைவாக சாப்பிடுகிறோம் / எஃபக்டிவ்வாக பணத்தை உபயோகிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம். கண்டிப்பாக அரசை குறை கூறும் எண்ணத்தில் இதை சொல்லவில்லை. இன்றைய நிலையில் நமக்குத் தேவை தொலைநோக்குடன் திட்டங்களைத் தீட்டி அதிகமோ குறைவோ சரியான வழியில் பணத்தை செலவு செய்யும் அரசுதான். நம் ஊர் அரசியலில் இதெற்கெல்லாம் வழியே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஆள்பவர்களுக்கும் தெரியும். :(//எந்த ஒரு புள்ளி விவரத்தையும் நமக்கு சாதகமாக சொல்லிக்கொள்ள முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.//அப்படி இல்லை சார். டேட்டா குவஸ்டின் ஆய்வை நீங்கள் முழுவதும் பார்த்து இதில் எங்கு சாதகமில்லாத தகவல் சாதகமாக்கப்பட்டுள்ளது என்று கூறுங்கள். தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன்
//பெர் கேப்பிடா ஐடி ஸ்பென்டிங் அதிகமாக இருந்தால் நாங்கள் அதிகம் செலவழிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளலாம்,//அதிகமாக செலவழிப்பது முக்கியமல்ல. அதிக பலன் பெறுவதே முக்கியம்.
அதிக அளவு பெட்ரோல் செலவழிப்பது முக்கியமா அதிக அளவு தூரம் செல்வது முக்கியமா என்று பார்த்தல் எது முக்கியம்அதிக அளவு பந்துக்களை சந்திப்பது முக்கியமா, அதிக அளவு ஓட்டங்களை எடுப்ப்து முக்கியமாகுறைவாக செலவழித்து ஒரு மாநிலம் தரவரிசையில் கடைசியில் இருந்தால் அதனால் எந்த பெருமையும் இல்லை. (நான் 3 பந்து சந்தித்தேன் 1 ஓட்டம் எடுத்தேன் என்பதற்கும் 100 பந்துக்களை சந்தித்து 10 ஓட்டம் எடுத்தேன் என்பதற்கும் 50 பந்தில் 100 ஓட்டம் எடுத்தேன் என்பதற்கும் வித்தியாசம் உண்டு)ஆனால் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு மாநிலம் குறைவாக செலவழித்தும் முதல் இடத்திற்கு வருகிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்
//குறைவாக இருந்தால் நாங்கள் குறைவாக சாப்பிடுகிறோம் / எஃபக்டிவ்வாக பணத்தை உபயோகிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.//சொல்லிக்கொள்ளலாம் என்று மட்டும் இல்லை. அது தானே உண்மை.//கண்டிப்பாக அரசை குறை கூறும் எண்ணத்தில் இதை சொல்லவில்லை. இன்றைய நிலையில் நமக்குத் தேவை தொலைநோக்குடன் திட்டங்களைத் தீட்டி அதிகமோ குறைவோ சரியான வழியில் பணத்தை செலவு செய்யும் அரசுதான். நம் ஊர் அரசியலில் இதெற்கெல்லாம் வழியே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஆள்பவர்களுக்கும் தெரியும். :(//மன்னிக்க வேண்டும் வெண்பூ சார். இதை நான் வன்மையாக மறுக்கிறேன். தொலைநோக்குடன் திட்டங்களை தீட்டி சரியான வழியில் பணத்தை செலவு செய்யும் அரசாங்கம் கடந்த 50 வருடங்களாக தமிழகத்தில் இருப்பதால் தான் (அனைத்து கட்சிகளையும் சேர்த்து தான் நான் கூறுகிறேன்) நம் மாநிலம் இந்த அளவு வந்துள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா

காலுறை நாற்றமடிக்காமல் இருக்க வழிமுறை என்ன
Posted: 2009-01-24 01:32:10 UTC-08:00
தமிழ்நாடு போன்ற வெப்ப நாடுகளில் சப்பாத்து அணியும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை இரு நாட்களில் காலுறை நாற்றமடிப்பது தான்காலுறை நாற்றத்திற்கு காரணம் கிருமிகளின் வளர்ச்சியேஇதை தடுக்க இரு வழிமுறைகள் உள்ளன
ஒரு காலுறையை 8 முதல் 12 மணி நேரத்திற்கு மேல் பயன் படுத்தாமல் அடுத்த காலுறையை மாற்றி விடுவது (அதிகம் வியர்க்கும் நபர்களுக்கு 8 மணி நேரம் - குறைவாக வியர்வை என்றால் 12 மணி நேரம்)
தினமும் காலுறை அணிந்த பின், சப்பாத்து அணியும் முன்னர் விரல் பகுதியில் மேல் பக்கம் ஒரு சொட்டு, பாதப்பக்கம் ஒரு சொட்டு மற்றும் குதிகால் பக்கம் ஒரு சொட்டு என்று ஒவ்வொரு காலிலும் மூன்று சொட்டுக்கள் டெட்டால் விட்டு விடுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தைஇது போல் ஒவ்வொரு காலிலும் மூன்று சொட்டு டெட்டால் விடுவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் வராதுஇதை தினமும் செய்ய வேண்டும். டெட்டால் என்று மட்டுமல்ல, சாவ்லான் போன்ற கிருமி நாசினிகளை கூட பயன்படுத்தலாம்

முதலை ஏன் உணவு உட்கொள்ளும் பொழுது கண்ணீர் வடிக்கின்றது !!
Posted: 2009-01-03 19:51:09 UTC-08:00
முதலை சாப்பிடும் போது கண்ணீர் விடுகிறது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ள செய்தி. ஆனால் அந்த முதலை அழவில்லை !!இது குறித்து நம் இலக்கியவாதிகள் புகுந்து விளையாடி விட்டனர்13ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் பார்தோலோமேயசு அங்கிலிகசு என்பவர், முதலை மனிதனை கண்டால் அவனை சாப்பிட்டு விட்டு அழும் என்று எழுதினார்ஈட்டி ஆட்டு துரை (shakespeare என்ற ஆங்கில ஆசிரியரின் பெயரை எழுத்து பிழையில்லாமல் எழுத shake spear e என்ற mnemonicஐ சொல்லித்தந்த எங்கள் பள்ளி ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை ஆஸ்வால்ட் ஞாபகத்திற்கு வருகிறார்) தனது ஒத்தெல்லோ நாடகத்தில்
O devil, devil!
If that the earth could teem with woman's tears,
Each drop she falls would prove a crocodile.
Out of my sight!என்று எழுதி முதலையின் விழி சுரப்பி நீருக்கு புதிய அர்த்ததை அளித்து விட்டார்அதன் பின்னர் முதலைக்கண்ணீர் என்ற பதம் பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டது. ஒருவருக்கு தொந்தரவு அளித்து விட்டு அதன் பிறகு வருத்தப்படுவது போல் செயல்படும் செயலை குறிக்க இந்த பதம் ப்ரவலாக பயன்படுத்தப்படுகிறதுதமிழில் இதை விட எளிதில் புரிய கூடிய சொற்தொடர்கள் உள்ளன
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோன்ற சொற்தொடர்கள் குறிப்பதும் இது போன்ற செயல்பாடுகளைத்தான்சரி இப்பொழுது முதலை ஏன் கண்ணீர் விடுகிறது என்று பார்க்கும் முன்னர் மனிதன் உணவு உண்ணும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் தானியங்கு நரம்பு மண்டலம் (அ) பரிவு நரம்பு மண்டலம் என்று ஒன்று உள்ளது (இது போல் பூள் நரம்பு; மைய நரம்பு மண்டலம்; மையநரம்புத்தொகுதி; மையநரம்புமண்டலம், சுற்றியநரம்புத்தொகுதி; புறநரம்பு மண்டலம் ஆகியவும் நரம்பு மண்டலத்தின் பகுதிகளே)இந்த தானியங்கு நரம்பு மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன
பரிவு நரம்பு மண்டலம் (Sympathetic Nervous System)
அனுபரிவு நரம்பு மண்டலம் (Parasympathetic Nervous System)இவை இரண்டும் எதிரெதிர் செயல்களை செய்ய கூடியவைஉதாரணமாக பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா விரிவடையும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா சுருங்கும்பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு அதிகரிக்கும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு குறையும்
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும் அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் வியர்வை அதிகரிக்கும்சுருங்க கூறினால் வேட்டைக்கு செல்லும் போது, யாரையாவது துரத்தும் போது, யாராவது உங்களை துரத்தும் போது, கடன் கொடுத்தவரை பார்க்கும் போது இயங்க வேண்டியது பரிவு நரம்பு மண்டலம். வீட்டில் நிம்மதியாக சாப்பிடும் போது இயங்க வேண்டியது அனுபரிவு நரம்பு மண்டலம்
அனுபரிவு நரம்பு மண்டலம் இயங்கினால் உமிழ்நீர் மற்றும் உணவு பாதை, குடல் ஆகியவற்றிலுள்ள உணவை செறிக்கும் திரவங்கள் அதிகம் சுரக்கும். பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் வாய் உலர்ந்து விடும். ஐஸ்கிரீமை பார்த்தவுடன், அல்லது பிரியாணி வாசம் காற்றில் வரும்போது நாக்கில் எச்சில் ஊற காரணம் அனுபரிவு நரம்பு மண்டலம். வாடிக்கையாளரிடம் கூறிய நேரத்தில் வேலையை முடிக்காமல் இருக்கும் போது பேச வேண்டி வந்தால் நாக்கு உலர்ந்து போவதற்கு காரனம் பரிவு நரம்பு மண்டலம் :) (ஐஸ்வர்யா ராயை பார்த்து ஜொள்ளு விடுவது, சிறிது அதிகம் மிரண்டால் சிறுவர்கள் அந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது போன்றவையும் இதற்கு தொடர்புடையவையே. அது குறித்து பின்னர் விரிவாக விளக்குகிறேன்)சரி. இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்அனுபரிவு நரம்பு மண்டலத்தின் நரம்புகள் மூளையில் பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மையம் என்று அழைக்கப்படும் நரம்பு மையங்களில் (Nuclei) இருந்து துவங்குகின்றனமனித உடலில் இந்த பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மண்டலத்தில் கீழ்க்காணும் நரம்பு மையங்கள் இருக்கின்றன
எடிங்கர் வெஸ்ட்பால் நரம்பு மையம் (Edinger Westphal Nucleus) அல்லது உதவி விழியிக்க நரம்பு மையம் (accessory oculomotor nucleus)
இதிலிருந்து வரும் நரம்பு கண்களில் உள்ள பாப்பாவிற்கு சென்று இந்த மையம் தூண்டப்பட்டால் பாப்பா சுருங்கும்
மேலுள்ள உமிழ்நீர் (Superior Salivatory) நரம்பு மையம்
இதிலுள்ள நரம்பு மேண்டிபிலுக்கு அடியில் உள்ள உமிழ்நீர் சுரப்பி (Submandibular Salivary Gland) மற்றும் நாக்கின்கீழுள்ள (Sublingual) உமிழ்நீர் சுரப்பி ஆகியவற்றிற்கு செல்கிறது. இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் இவ்விரு சுரப்பிகளிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது
கீழுள்ள உமிழ்நீர் (Inferior) நரம்பு மையம்
இதிலுள்ள நரம்பு பரோட்டிட் உமிழ்நீர் சுரப்பி சென்று இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் பரோட்டிட் சுரப்பியிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது
கண்ணீர் (Lacrimatory) நரம்பு மையம்
இந்த மையத்திலிருந்து நரம்பு கண்ணீர் சுரப்பி செல்கிறது
வேகஸ் நரம்பின் பின் (இயக்க) மையம் Dorsal (Motor) Nucleus of Vagus
இதிலிருந்து தான் இதயம் முதல் உணவு பாதையில் பெருபகுதி உட்பட நரம்புகள் செல்கின்றன
இதில் முக்கிய விஷயங்கள்
இந்த ஐந்து மையங்களும் ஒரே வகை செல்களிலிருந்து தோன்றியவை
கண்ணீர் நரம்பு மையம் உமிழ்நீர் நரம்பு மையத்திற்கு வெகு அருகில் இருக்கிறது
பிற நரம்பு மையங்கள் குறித்து அறிய வேண்டும் என்று விரும்பினால் இங்கு செல்லலாம் இது தான் சராசரி மனித உடலில் இருக்கும் நரம்புகளின் இயக்கம்.
ஆனால் முதலைகளை பொறுத்த வரை கண்ணீர்மையம், உமிழ்நீர்மையம் ஆகியவை ஒன்றாக இருப்பதால் அவை உணவை உட்கொள்ளும் போது உமிழ்நீருடன் கண்ணீரும் சேர்ந்து சுரக்கின்றது (கூடவே உணவு பாதையில் உணவை செரிக்கும் திரவங்களும்). முதலை என்று மட்டுமல்ல, பொதுவாக ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்களுக்கே இப்படி தான். ஆனால் பல்லி, பாம்பு, ஓனான், ஆமை போன்றவைகளின் கண்களை அவை உணவருந்திய பின்னர் யாரும் கவனிக்காததால் முதலை உணவருந்திய உடன் கண்ணீர் சுரப்பது பெரிய விஷயம் ஆகி விட்டது
இதே போல் மனிதர்களிலும் சிலருக்கு முதலைக்கண்ணீர் நோய்குறியீடு (crocodile tear syndrome) என்று ஒன்று உள்ளது. இவர்கள் உணவை சாப்பிடும் போது அதிகம் கண்ணீர் சுரக்கும். பேசியல் நரம்பு பாதிக்கப்பட்டு பின் அது சரியாகும் போது இந்த நரம்புகள் மாறி சேருவதால் வரும் பாதிப்பு இது. அதே போல் ப்ரே நோய்குறியீடு என்று ஒன்று உள்ளது, இதுவும் நரம்பு மாறி சேருவதால் வருவதே
இந்த இடுகை எழுத தூண்டுகோலாக இருந்த இடுகை இது தான்

இந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன
Posted: 2008-12-20 17:50:52 UTC-08:00

விஞ்ஞான புனை கதைகள் எழுத்தாளர் ஆர்தர் க்ளார்க
இந்திய கிரிக்கெட் வீரர் பக்வத் சந்திரசேகர்
உடலியக்கவியல் (Physiology) புத்தகத்தை எழுதிய ஆர்தர் கைடன்
உளவியல் நிபுணர் எரிக்சன்
ஓலிம்பிக்கில் தங்கம் வென்ற வில்மா ரூடால்ப்
உரோமிய அரசன் க்ளாடியஸ்
ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட்
வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர் ராமகிருஷ்ணன்
அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
ஜெர்மன் அரசியல்வாதி கெப்பல்ஸ் (கோயாபல்ஸ் பிரசாரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே அது இவர் தான்)முதல் கேள்வி இவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது. அது என்னஇரண்டாவது கேள்வி (அல்லது முதல் கேள்விக்கு உதவி குறிப்பு)இன்று இந்த கேள்வி கேட்ட காரணம் என்ன

அரசு துறையில் ஒரு மென்பொருள் / கணினி / மின் ஆளுமை திட்டம் வெற்றிபெற முக்கிய காரணங்கள்
Posted: 2008-12-20 09:03:27 UTC-08:00
நேற்றும் இன்றும் சென்னையில் நடந்த மெடிடெல் 2008 கருத்தரங்கில் எனது உரை.
ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே தந்துள்ளேன். அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் மின்னாளுமை (eGovernance) / கணினி / மென்பொருள் திட்டங்களில் இருந்த நாங்கள் அனுபவ பூர்வமாக கற்றவைகளையே வைத்தே நான் பேசினேன். இதில் நான் கூறிய முக்கியமான் விஷயங்கள்
“புதிய”, “அதிக விலையுடைய”, “அதிகம் வசதிகள் உள்ள” தொழிற்நுட்பங்கள் இருக்கின்றன் என்ற ஒரே காரணத்திற்காக அவைகளை பயன் படுத்த வேண்டாம்
பயனர்கள் அந்த மென்பொருளை ஏற்றுக்கொள்வதே ஒரு மின்னாளுமை திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே தவிர தொழிற்நுட்பமோ, அதிக எண்ணிக்கையிலான வசதிகளோ, பல நிறங்களுடன் கூடிய பக்கங்களோ அல்ல
குறைந்த விசைப்பலகை மற்றும் எலி பயன்பாடு இருக்கும் திட்டங்கள் எளிதில் வெற்றி பெறுகின்றன
ஏற்கனவே பழக்கமான இடைமுகங்கள் மற்றும் படங்கள் அதிகம் உள்ள இடைமுகங்களை எளிதாக பயன் படுத்த முடிகிறது
குறைந்த “வழுக்கள்” - விரைவில் பயன்பாடு
இணையம் சார் திட்டங்கள் (web based) Client Server திட்டங்களை விட சிறந்தது
இடைமுகம் தமிழில் இருந்தால் திட்டம் அதிகம் வரவேற்பு பெறும் என்னைத்தவிர அரசு தரப்பில் இருந்து பேசிய தகவல் தொழிற்நுட்ப துறை செயலர் திரு.பி.டபிள்யூ.சி.டேவிதார் இ.ஆ.ப அவர்களின் பேச்சில் குறிப்பிட்ட சில விஷயங்கள்
மின்னாளுமை திட்டங்களில் தொழிற்நுட்பத்தை விட “மாற்றம் மேலாண்மை”யே (change management ) அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம்
அவரது துறையில் கோப்புகளை மின்மயமாக்குவது குறித்து விவாதம் வந்த போது ஒருவர் கூறியது “ஒரு வருசந்தான் இருக்கு, எங்கள விட்டுடுங்க” (ஓய்வு பெற ஒரு வருடமே இருப்பதால் அவர்கள் கணினிக்கு மாறுவதில், ஒரு புது முறையை படிப்பதில் தயக்கம்)
தமிழகத்தில் தற்சமயம் குளச்சல், பத்மநாபபுரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கள் ஆகிய ஐந்து மருத்துவமனைகளில் “மருத்துவ மேலாண்மை திட்டங்கள்” (hospital management system) துவக்கப்பட்டுள்ளன
சனவ்ரி 20, 2009க்கு பின்னர் இது மேலும் 48 மருத்துவமனைகளுக்கு விரிவு படுத்தப்படும் (தேனி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்னகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள்)
அதன் பிறகு, இந்த நிலையங்களில் இருந்து பெறப்படும் கருத்துக்களின் படி மென்பொருளில் மாற்றம் தேவைப்பட்டால் மாற்றம் செய்யப்பட்டு 270 மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்தப்படும்
பின்னர் 1417 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்படும் வெளிநாடுகளில் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள்) மற்றும் நம் நாட்டின் பிற மாநிலங்களில் சுகாதார துறை மற்றும் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரியும் பலருடயை உரைகளை கேட்டதுடன் அவர்களுடன் பேசியதில் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்ததுநேரம் கிடைக்கும் போது மேலும் விரிவாக எழுதிகிறேன்

மறுமொழியில் சுட்டி சேர்ப்பது எப்படி
Posted: 2008-12-17 21:11:41 UTC-08:00
பொதுவாக மறுமொழிகள் எழுதும் போது பலரும் அந்த URLஐ அப்படியே வெட்டி ஒட்டுவார்கள்எ.கா : http://www.payanangal.in/2008/06/500.htmlசில நேரங்களில் இப்படி URL இல்லாமல் ஒரு சுட்டியே சேர்க்கப்பட்டிருக்கும்மறுமொழிகளில் சுட்டி சேர்ப்பது மிகவும் எளிதான விஷயம் தான்
அவ்வளவு தான்நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டியது
என்ற html குறியீடுகளைத்தான்

க்ரீமி லேயர் ஏன் தேவை என்று தெளிவாக விளக்கிய Nair Service Society க்கு நன்றி
Posted: 2008-12-16 03:26:20 UTC-08:00
ஓபிசி கிரிமி லேயர் அளவை வறுமைக்கோட்டு அளவாக வைத்தால் தான் ஒபிசி மாணவர்களுக்கான இடங்கள் காலியாகி, அந்த காலியிடங்களில் FC மாணவர்கள் தேர்வாக முடியும் என்று வெளிப்படையாக இடப்பங்கீட்டிற்கு எதிராக வாதாடும் வக்கீல் கூறியிருப்பது முக்கியமான விஷயம். (http://www.hindu.com/2008/12/16/stories/2008121659551100.htm) (இப்படி அப்பட்டமாக வெளிப்படையாக கூறியது ignoranceஆ அல்லது arroganceஆ என்று தெரியவில்லை :) ;) )அரசியல் சாசனத்தில் இல்லாத க்ரீமி லேயரை உச்ச நீதிமன்றம் ஏன் கொண்டு வந்தது என்று இது நாள் வரை புரியாதவர்கள் இன்றாவது புரிந்து கொள்ளட்டும்.க்ரிமீ லேயர் என்றால் என்ன, அதில் நடக்கும் மோசடி என்ன, ஏன் இடப்பங்கீட்டு ஆதரவாளர்கள் அதை எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளாதவர்கள் மற்றும் புரிந்து கொள்ளாதது போல் நடிப்பவர்கள் அனைவருக்கும் க்ரீமி லேயர் என்பதே இடப்பங்கீட்டின் பலனை பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து பறித்து பின்வாசல் வழியாக அதை முற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கும் மோசடி என்று தெள்ள தெளிவாக விளக்கம் அளிக்கும் வண்ணம் வழக்கு தொடர்ந்த Nair Service Society க்கும் அதேயே நீதிமன்றத்தில் உரக்க கூறிய அவர்களின் வக்கீலுக்கும் நன்றிஇடப்பங்கீடு குறித்த எனது பழைய இடுகைகள்
முற்பட்ட வகுப்பினருக்கு 68.50 சதவிகித இடப்பங்கீடு வழங்கும் தேர்வு எது தெரியுமா
தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராதவர்களின் சாதி என்ன
சாதி சான்றிதழ் வழங்குவது அரசின் எந்த துறை
முற்பட்ட வகுப்பினர் பெறும் போலி பிற்பட்ட வகுப்பு சான்றிதழ்கள்
தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்ன
"குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்" -- பத்ரி சாரின் பதிவுக்கு ஒரு கருத்து
2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்
தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்
பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு - உச்ச நீதிமன்றம்
இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும்
இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும் : 2 : சதவிகித முறை
ஒரு சதவிதம் மதிப்பெண் எடுத்தாலே பொது பிரிவில் ஐ.ஐ.டியில் சேரலாம்

நட்சத்திர பதிவரானால் வலைப்பதிவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா
Posted: 2008-12-15 04:44:34 UTC-08:00
எனது வலைப்பதிவின் கடந்த 6 மாதங்களுக்கான வாசகர் வருகை விபரங்களை பாருங்கள்
கீழுள்ளது செய்தியோடை குறித்த விபரங்கள்
நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தது இந்த வருடம் அக்டோபர் 20 முதல் 27 வரை (20-10-2008 முதல் 27-10-2008 வரை)அந்த நேரத்தில் வலைப்பதிவிற்கான வாசகர் வருகையில் பெரிய அளவு மாற்றங்கள் இல்லை என்றாலும், அதன் பிறகு சிறிது அதிகரித்திருப்பது உண்மைதான். அதற்கு முன்னர் ஒரு நாளில் 300 வாசகர்கள் என்ற எண்ணிக்கை அரிதாக இருப்பதையும் அதன் பின்னர் தினமும் 300 பேர் வந்திருப்பதையும் காணலாம்
அதே நேரம் செய்தியோடையை எடுத்துக்கொண்டால் செய்தியோடையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழ் மண நட்சத்திரமாக இருந்த நேரம் செய்தியோடைக்கு வாசகர் வரத்து புதிதாக அதிகரிக்கவில்லை. வழக்கமான அதே “வளர்ச்சி” விகிதம் தான் இருந்துள்ளது
இது எனது பதிவை வைத்து எழுதியது.மற்ற்வர்களின் பதிவில் வாசகர் வருகை எப்படி அதிகரித்தது என்று எனக்கு தெரியாது :)

சமூக சமத்துவத்திற்காக பதவியை இழக்க துணிந்தவருக்கு கண்ணீர் அஞ்சலிகள்
Posted: 2008-11-27 19:49:42 UTC-08:00

(படம் : விக்கீபிடியாவிலிருந்து )விசுவநாத பிரதாப் சிங்
இந்தியாவின் 10ஆவது பிரதமர்
பிரதமராக இருந்த போது பிற்பட்டவர்களுக்கு கல்வி, வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக (மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி) பதவியை இழக்க கூட துணிந்தவர்.
மத்திய நிதியமைச்சராக இருந்த போது அமிதாப் பச்சன், அம்பானி ஆகியோரின் வருமான வரியை சரி பார்த்ததால் பதவியை இழந்தவர்
மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது போபர்ஸ் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர முயன்றதால் பதவியை இழந்தவர்
உத்திரபிரதேசத்தின் 16ஆவது முதல்வர்
அங்கு நடைபெற்ற திருட்டு, வழிப்பறியை நிறுத்தியவர்
மேலும் விபரங்களுக்கு ஆங்கில விக்கிபீடியாவை பார்க்கவும்
தமிழில் வாசிக்க திருவின் வி.பி.சிங்: சில குறிப்புகள்! தளத்திற்கு செல்லவும்

2008 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த போது, இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண் என்ன
Posted: 2008-11-24 18:17:31 UTC-08:00
2008 ஆண்டு மருத்துவ படிப்பிற்கான முதல் சுற்று கலந்தாய்வின் போது குறைந்த பட்ச மதிப்பெண் தேவை
முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 197.25 / 200 = 98.625 % (பொது பிரிவில் தேர்வாக)
பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 195.25 /200 = 97.625 %
கிருத்தவர்கள் - பி.சி.சி - 194.50 /200 = 97.250 % (இந்த பங்கீடு பலன் அளிக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம்
முஸ்லிம்கள் - பி.சி.எம் - 193.25 / 200 = 96.625 %
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 192.50 /200 = 96.250 %
அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 187.50 /200 = 93.750 %
பழங்குடியினர் - எஸ்.டி - 176.25 / 200 = 88.125 %என்று இருந்தது. அதில் பலர் இடம் கிடைத்தும் சேராமல் இருந்ததால், காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்படி காத்திருப்பு பட்டியலில் இருந்து தேர்வானவர்களின் குறைந்த பட்ச மதிப்பெண்கள் இது தான்
2008 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த போது (30-09-2008) அன்று இருந்த நிலை
பிரிவு
அரசு கல்லூரிகளில் MBBS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
சுயநிதி கல்லூர்களில் MBBS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
அரசு கல்லூரிகளில் BDS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
சுயநிதி கல்லூர்களில் BDS இடம் கிடைக்க தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்
பொது பிரிவு
197.00
193.75
192.00
-
பிற்படுத்தப்பட்டவர்கள் BC
194.50
191.75
189.50
-
கிருத்தவர்கள் BCC
193.75
192.50
190.50
-
முஸ்லிம்கள் BCM
193.00
191.75
191.75
-
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் MBC
191.50
188.00
184.25
-
அட்டவனை வகுப்பினர் SC
186.00
180.25
176.75
-
பழங்குடியினர் ST
171.25
156.75
161.00
-இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்களேன்.
என் கருத்துக்களை நான் கடைசியில் கூறுகிறேன்.

* 20 - சமூக மருத்துவம் - நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் Water Washed Diseases or Water Scarce Diseases
Posted: 2008-10-26 20:01:23 UTC-07:00
இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) முந்தைய இடுகைகளை வாசிக்க
1. நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை
2. நீரினால் பரவும் பிணிகள் Water Dispersed Diseases
3. நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் Water Based Diseases
4. நரம்பு சிலந்தி- நீரை அடிப்படையாக கொண்ட பிணி் Guinea Worm Water Based Disease
5. நரம்பு சிலந்தி நோயை ஒழித்தது எப்படி - How Guinea worm was eradicated in Tamil Nadu
6. நீருடன் தொடர்புடைய பிணிகள் Water related Diseases நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) என்பவை தண்ணீர் பற்றாக்குறையால் தனிமனித சுகாதாரம் பேண முடியாததால் ஏற்படும் நோய்கள் . குளிப்பதற்கு அல்லது முகம் கழுவதற்கு போதிய நீர் இல்லாத இடங்களில் இந்த பிணிகள் ஏற்படுகிறது கருவிழித் தொற்று / விழிவெண்படலத் தொற்றுநோய் / திராக்கோமா / கண்ணிமை நோய் / இமைப்புண் / Trachoma :
கிளைமிடியா டிராக்கொமாட்டிஸ் (Chlamydia. trachomatis) என்ற நுண்ணுயிரினால் வருவது இது
கண்பார்வை பறிபோக காரணமாக இருக்கும் ஒரு நோய்.
உங்கள் / குழந்தைகளின் கண்ணின் மேல் இமையில் இது போலிருந்தால் நீங்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகவேண்டும் (இந்த ப்டம் கண் இமையை திருப்பி எடுக்கப்பட்டது
தமிழகத்தில் இந்த நோயின் பாதிப்பு குறைவு.
அடிக்கடி குளிக்காத வட இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் இதுசார்காப்டிஸ் வகைச் சொறிப் பாதிப்பு /வங்குநோய் / அளவன் / சொறிசிரங்கு / ஸ்கேபிஸ் :
இது தோல் நோய்.
தினமும் குளிக்காததால் வரக்கூடியது.
தோல், விரலிடுக்குகள், அரைகள் ஆகிய இடங்களில் அறிப்பும், தடிப்பும் ஏற்படலாம்
குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அனைவருக்கும் பரவக்கூடியது
மாணவர் விடுதிகள், பள்ளிகள், காவல்துறை பயிற்சி பள்ளி போன்ற இடங்களில் அனைவரையும் ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடியது
குடும்பத்தில் / விடுதியில் அனைவரும் ஒரே நேரத்தில் வைத்தியம் பார்க்க வேண்டும்
மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது சிறந்தது.
சிகிச்சைக்கு முன்னர் அணிந்த ஆடைகளை சிகிச்சை பெற்ற பின் ”இஸ்திரி போட்டு” தான் அணிய வேண்டும் படர்தாமரை / வளையப்புழு / Ringworm :
இதுவும் தோல் நோய்தான்.
படர்தாமரையால் பாதிக்கப்பட்டு பல ஆயிண்ட்மெண்டகள், க்ரீம்கள் வாங்கி போட்டும் பலன் இல்லாமல் அவதிப்படவேண்டியவர்கள் செய்ய வேண்டியது
உள்ளாடைகளை வெயிலில் காய வைக்க வேண்டும்
தினமும் குளிக்க வேண்டும்
மெடிமிக்ஸ் சோப்பு உபயோகிக்கவும்
இதன் பின்னரும் பலனில்லை என்றால் மருத்துவரை அனுகவும்தொடர் நிறைவு பெற்றது :)

* 19 - சமூக மருத்துவம் - நீருடன் தொடர்புடைய பிணிகள் Water related Diseases

5. நரம்பு சிலந்தி நோயை ஒழித்தது எப்படி - How Guinea worm was eradicated in Tamil Nadu நீருடன் தொடர்புடைய பிணிகளை (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) - இந்த நோயை பரப்பும் கிருமிகள் நீரில் இருக்கும் அல்லது நீரில் வளரும். (Insect Vector Breeds in Water) உதாரணம் மலேரியா, சிக்குன்குனியாஎன்னது, மலேரியா நீரினால் பரவும் நோயா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம்
மலேரியா பரவ வேண்டுமென்றால் கொசு வேண்டும்
கொசு வேண்டுமென்றால் கொசு முட்டை வேண்டும்,
கொசு முட்டை எங்கு இடப்படும் தெரியுமா, நீரில் தான்.அதனால் தான் இதை நீரினால் பரவும் நோய் என்று கூறாமல் நீருடன் தொடர்புடைய நோய் என்று கூறுகிறோம்கொசுவினால் பரப்பப்படும் நோய்கள் பல இருக்கின்றன. அதேப்போல் கொசுக்களும் பல இருக்கின்றன. இப்பொழுது ஒரு சிறிய அட்டவனையை பார்ப்போமா
கொசு வகை
பரப்பும் நோய்
முட்டையிடும் இடங்கள்
அனாபிலஸ்
மலேரியா
சுத்தமான நீர் (வயல்வெளிகள்)
கியூலக்ஸ்
யானைக்கால் நோய்
அழுக்கு நீர் (சாக்கடை)
ஏடிஸ்
சிக்குன்குனியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல்
செயற்கையாக தேங்கும் நீர் (டின்கள், தேங்காய் சிரட்டை, குளிர்சாதன கருவியிலிருந்து ஒழுகும் நீர்கள், மொட்டைமாடியின் ஓரத்தில் தேங்கும் நீர், டயர்களுக்குள் தேங்கும் நீர்இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்சிக்குன் குனியாவை பரப்பும் கொசுவானது சாக்கடை நீரில் வளர்வதில்லை. சாக்கடையே இல்லையென்றால் கூட உங்கள் வீட்டு மொட்டை மாடியில் டயரோ, தேங்காய் சிரட்டையோ, குளிர்சாதன பொறியில் இருந்து விழும் நீரோ, ஆட்டு உரலோ இருந்தால் போதும். ஏடிஸ் வகை கொசுக்கள் பல்கி பெருகிவிடும் அதேப்போல் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு விஷயம், சாக்கடை அடைப்பில்லாமல் இருப்பதோ அல்லது கழிவு நீர் தேங்காமல் பார்க்க வேண்டியது அரசின் பணி. ஆனால் ஏடிஸ் வகை கொசுக்களின் பரவலைத்தடுப்பது அரசால் மட்டுமே இயலக்கூடிய காரியம் அல்லஇதில் பொது மக்களின் பங்கு தான் முக்கியம்சரிமலேரியாவிலிருந்து உங்களை எப்படி பாதுகாப்பது.இரண்டு வழிகள் இருக்கின்றன1. பிளாஸ்மோடியத்திலிருந்து உங்களை பாதுகாக்க2. கொசுவிலிருந்து உங்களை பாதுகாக்கபிளாஸ்மோடியத்திலிருந்து பாதுகாக்க : இது மிகவும் பலனுள்ள முறை என்றாலும், மிக குறுகிய காலங்களில், கொசுவிலிருந்து பாதுகாக்க முடியாத சூழலில் மட்டுமே பயன் படுத்த வேண்டும். முக்கியமாக மருத்துவர்கள் / மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் மலேரியா பாதிப்புள்ள இடங்களுக்கு செல்லும் போது இந்த மாத்திரைகளை உட்கொள்வார்கள். இயற்கை சீற்றங்களின் போதும் இது பலனளிக்கக்கூடியது. இது நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற முறை அல்லகொசுவிலிருந்து பாதுகாப்பது : இது தான் நடைமுறைக்கு ஏற்றது. மேலும் இது மலேரியா மட்டுமல்லாது கொசுவினால் பரவும் பிற நோய்களின் ப்ரவலையும் தடுக்கிறது
இதில் சிறந்த முறை : கொசு வலை தான் !!! அதிலும் உங்கள் படுக்கை அறையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தூங்குகின்றன என்றால் (ஆகா 90 சதவித பதிவர்கள் இதற்குள் வருவார்கள். பலருக்கு மகன்/ மகள். சிலருக்கு பேரன் பேத்தி ) இந்த வழிமுறைதான் சிறந்தது
க்ரீம்கள் பலருக்கும் பிடிப்பதில்லை.
கொசுவர்த்தி சுருள் / பட்டைகள் / திரவங்கள் - இவை குழந்தைகளுக்கு ஏற்றவை அல்ல :(இதை எல்லாவற்றையும் விட சிறந்த முறை எது தெரியுமா : கொசு வளர ஏற்ற சூழ்நிலை உருவாகாமல் தடுப்பது தான்சந்தேகங்களை கேட்கலாம்இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகையை வாசிக்க
7. நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் Water Washed Diseases or Water Scarce Diseases

* 18 - சமூக மருத்துவம் - நரம்பு சிலந்தி நோயை ஒழித்தது எப்படி - How Guinea worm was eradicated in Tamil Nadu

4. நரம்பு சிலந்தி- நீரை அடிப்படையாக கொண்ட பிணி் Guinea Worm Water Based Disease 1981 முதல் 1990 பத்தாண்டுகளை ஐ.நா சபை சர்வதேச குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார பத்தாண்டு (International Drinking Water Supply and Sanitation Decade ) என்று வரையறுத்தவுடன் ஏற்கனவே பெரியம்மையை “ஒழித்தி”ருந்த அனுபவமும் உற்சாகமும் கை கொடுக்க நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்த கிளம்பிவிட்டனர்அப்பொழுது இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த நோய் அதிக அளவில் இருந்தது
ராஜஸ்தான்
குஜராத்
ஆந்திர பிரதேசம்
மத்திய பிரதேசம்
மகாராஷ்ட்ரா
கர்நாடகா
தமிழ்நாடு
இந்தியாவிலும் இந்த திட்டம் 1980 முதல் செயல்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் 1983ஆம் ஆண்டு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44819
1984ல் ஒரு மாநிலத்திலிருந்து இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது
1984ல் 89 மாவட்டங்களில் 12840 கிராமங்களில் 39,792 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்
1986ல் உலக சுகாதார சபை நரம்பு சிலந்தியை ஒழிப்பது என்று தீர்மானம் இயற்றிய போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22610வாக குறைந்திருந்த்து.
1987ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17031.
1988ல் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணமடைந்திருந்தனர். அப்பொழுது கூட ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்ததுபொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்திலிருந்து நாலே வருடங்களில் நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்தது
1996ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மாவட்டத்திலிருந்து 3 கிராமங்களில் 9 பேர்களிட தான் நரம்பு சிலந்தி கடைசியாக காணப்பட்டது
1999 வரை ஏழு முறை இந்த திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 1999ல் கடைசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
உலக சுகாதார நிறுவனத்தில் நிபுணர் குழு 1999 நவம்பர் 9 முதல் 25 வரை ஆய்வு செய்தனர்
அதன் பின்னர் 2000 இந்தியாவில் இந்த நோய் இல்லை (eliminated) என்ற சான்று வழங்கப்பட்டது
2001 பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய நரம்பு சிலந்தியற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது (free of guinea worm)
முதன் முதலாக இந்த சான்றை பெற்ற ஆசிய நாடு நாம் தான்
இதை எப்படி சாதித்தார்கள்
நரம்பு சிலந்தியின் வாழ்க்கை சுழற்சியை பார்த்தோம்.இப்பொழுது மீண்டும் அதில் முக்கியமான பகுதிகளை பார்ப்போம்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல்
காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல்
ஆக இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழுவால பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுவதை தடுத்தல்
ஆழ்துளை கிணறுகளை அமைத்தல்
கைபம்புகளை அமைத்தல்
தண்ணீரை காய்ச்சுதல்
வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடித்தல்
காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுவதை தடுத்தல்
படி கிணறுகளை மூடி ஆழ்துளை கிணறுகள் அமைத்தல்
அவ்வளவு தான் :) :) மருந்தில்லை, மாத்திரையில்லை, கத்தியில்லை, ரத்தமில்லை :)ஏற்க்னவே பார்த்தப்படி ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்.
அதன் பிறகு தான் வாழ்க்கை முறை மாற்றம் (life style modification) என்பது பெரிய அளவில் கடைபிடிக்கப்பட்டது. நீரிழிவு நோய் என்றால் மாத்திரை / இன்சுலின் என்பதற்கு பதில் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்றும் இரத்த அழுத்தம் என்றால் உப்பு கட்டுப்பாடு , தியானம் என்றும் மாற தூண்டுகோலாக இருந்தது இந்த நிகழ்வு தான்
நுரையீரல் புற்றுநோயை தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததும், எய்ட்ஸை தடுக்க ஆணுறை, புள்ளி ராஜா விளம்பரங்கள் கூட வாழ்க்கை முறை மாற்றம் சார்ந்த நுட்பங்களேதொடர்புடைய சுட்டிகள் (மருத்துவர்கள் / பொது சுகாதார துறையினருக்கு மட்டும் தான். மற்றவர்கள் பயப்பட வேண்டாம்)
Watts SJ. Dracunculiasis in Africa: its geographic extent, incidence, and at-risk population. Am J Trop Med Hyg 1987;37:119-25.
http://www.ajtmh.org/cgi/content/abstract/37/1/115
http://www.dailyexcelsior.com/99nov17/edit.htm
Hoeppli R. Parasitic diseases in Africa and the western hemisphere: early documentation and transmission by the slave trade. Acta Tropica 1969;(suppl 10):124-32.
Litvinov SK, Lysenko A. Dracunculiasis: its history and eradication in the USSR. In: National Science Foundation. Workshop on Opportunities for Control of Dracunculiasis. Washington, DC: National Science Foundation, 1982.
http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00001528.htm
Kapali V, Sadanand AV, Prakasam J. Eradication of dracontiasis in Tamil Nadu state. J Commun Dis 1984;16:244-6. *Use of trade names is for identification only and does not imply endorsement by the Public Health Service or the U.S. Department of Health and Human Services. **In 1980, several agencies, including the United Nations Development Programme, the World Health Organization, and the World Bank, declared 1981-1990 the "International Drinking Water Supply and Sanitation Decade." A major goal is the provision of safe drinking water to all countries.
http://mohfw.nic.in/kk/95/i9/95i90h01.htm
http://pib.nic.in/archieve/lreleng/lyr2000/rjan2000/r08012000.html
http://www.searo.who.int/EN/Section316/Section503/Section2373_12998.htm
http://www.nihfw.org/ndc-nihfw/html/Programmes/GuineaWormEradicationProgramme.htm
இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளை வாசிக்க
6. நீருடன் தொடர்புடைய பிணிகள் Water related Diseases

* 17 - சமூக மருத்துவம் - நரம்பு சிலந்தி நீரை அடிப்படையாக கொண்ட பிணி் Guinea Worm Water Based Disease

3. நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் Water Based Diseases நீரை அடிப்படையாக கொண்ட நோய்கள் பல இருப்பதும் அதில் சிஷ்டோசோமியாசிஸ் என்ற ஒரு வகை நோய் இருப்பதையும் அது எப்படி தாக்குகிறது என்பதையும் பார்த்தோம். அதே போல் அந்த நோய் தமிழகத்தில் பரவலாக கிடையாது என்பதையும், அதற்கு பதில் நரம்பு சிலந்தி என்ற ஒரு நோய் இங்கு இருந்ததையும், தற்போது நரம்பு சிலந்தி தமிழகத்தில் கிடையாது என்றும் பார்த்தோம்நரம்பு சிலந்தி என்ற நோய் பற்றி இந்த இடுகை. ஏன் இந்த நோய் குறித்து ஒரு தனி இடுகை என்பதை இறுதியில் புரிந்து கொள்வீர்கள் முதலில் இந்த நோய் என்னவென்றே தெரியாதவர்களுக்கு சில படங்கள்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் ஒரு புழு இருக்கும்.சரி, அப்ப இந்த புழுவை எப்படி வெளியில் எடுப்பது. அதை ஒரு தீக்குச்சியில் (அல்லது ஏதாவது குச்சியில்) சுற்றிக்கொண்டு தினமும் சிறிது சிறிதாக எடுக்க வேண்டும்
சரி, இனி இந்த புழுவை பற்றி தெரிந்து கொள்ளலாம்ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ”படி கிணறுகள்” (step wells) அதிகம் உண்டு. நம் ஊர் போல் கயிறு வாளி எல்லாம் தேவையில்லாமல் கிணற்றில் நேரடியாக இறங்கி நீரை எடுக்க வேண்டியது தான்.இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் !!இந்த புழுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிணற்றினுள் இறங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அவரது காலில் இருக்கும் அந்த புழு சிறிது எட்டிப்பார்த்து நீரினுள் லார்வாக்களை விட்டு விடுகிறது. (மற்ற நேரங்களில் லார்வாக்களை வெளியிடாது. மற்ற நேரங்களில் வெளியிட்டால் லார்வாக்களால் பிழைக்க முடியாது என்பதால் அதனால் பலனில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் புத்திசாலி புழு அது !!)அந்த லார்வாக்கள் (இவைகளை L1 லார்வாக்கள் என்று அழைக்கிறார்கள்) சைக்லாப்ஸ் (cyclops) என்னும் சிறிய உயிரினங்களுக்குள் புகுந்து ஒரு 15 நாட்கள் உள்ளே இருந்து வளர்ச்சி பெறுகின்றன. (வளர்ச்சி பெற்ற பின் அவை L3 லார்வாக்கள் ஆகிவிடுகின்றன)இப்படி இருக்கையில் அதே நீர்நிலைக்கு ஒருவர் வருகிறார். அங்கிருந்து நீரை எடுத்து செல்கிறார். அதை காய்ச்சாமல், வடிகட்டாமல் அப்படியே குடிக்கிறார். சைக்ளாப்ஸும் (அதனுள் இருக்கும் லார்வாவும்) அவரின் வயிற்றிற்கும் செல்கின்றன. சைக்லாப்ஸ் ஜீரணமாகி விடுகிறது. அதனுள் இருக்கும் L3 லார்வா வெளிவருகிறது இரைப்பையின் சுவற்றை துளைத்து சென்று உடலினுள் புகுந்து தோலுக்கு அடியில் வந்து விடுகிறது
9 முதல் 12 மாதங்களில் அவை புழுக்களாகிவிடுகின்றன. அதன் பிறகு இந்த நபர் நீரில் காலை வைத்தால் உடன் L1 லார்வாக்களை வெளியிட்டு, அவை L3லார்வாக்கள் ஆகி, அந்த நீரை ஒருவர் வடிகட்டாமல் குடித்து அவருடம்பில் மீண்டும் புழுவாக வேண்டியது தான்.இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக இருந்த இந்த நோய் இன்று கிடையவே கிடையாது. இதிலென்ன, ஒரு காலத்தில் பரவலாக இருந்த பெரியம்மையும், போலியோவும் கூடத்தான் இன்று கிடையாது. டெட்டெனஸ், கக்குவான் இருமல் டிப்தீரியா போன்றவையும் வெகுவாக குறைந்து விட்டன என்று நீங்கள் கூறலாம்.அந்த நோய்களை எல்லாம் நாம் தடுப்பூசி மூலமே கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்தி பின்னர் காணாமல் ஆக்கியது தடுப்பூசி மூலம் அல்ல. பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமேநோயை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ ஊசியோ, மாத்திரையோ இல்லாமல் மக்களின் நடத்தை மாற்றம் மூலம் மட்டுமே ”அழிக்க”ப்பட்ட ஒரு நோய் நரம்பு சிலந்திதான்..ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்.சரி என்ன செய்து தமிழக்த்தில் இருந்து இந்த நோயை விரட்டினார்கள் என்று பார்ப்போமாஇந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளையும் வாசிக்க

* 16 - சமூக மருத்துவம் - நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் Water Based Diseases

2. நீரினால் பரவும் பிணிகள் Water Dispersed Diseases நீரை அடிப்படையாக கொண்ட பிணிகளில் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். (A part of the life cycle of the organism causing this disease is in water) உதாரணம்: நரம்புச்சிலந்தி, சிஷ்டோசோமியாசிஸ்இவ்வகை நோய்களை பற்றி புரிதல் ஏற்பட முதலில் சிஷ்டோசோமியாசிஸின் வாழ்க்கை சுழற்சியை பார்ப்போம். கீழுள்ள படத்தை பாருங்கள்.
மனிதனிடமிருந்து சிஷ். முட்டை வெளிவருகிறது. அது பின்னர் நீரில் மிராசிடியமாக மாறுகிறது. அது ஒரு (நீரில் வாழும்) நத்தையின் உள் சென்று பன்மடங்கு பெருகி செர்காரியாவாக மாறுகிறது.இந்த செர்காரியாக்கள் நீரில் நீந்திக்கொண்டிருக்கின்றன. மனிதன் அங்கு காலை வைத்தாலோ அல்லது குளித்தாலோ அவை தோலை துளைத்து உடலுக்கு உள்ளே சென்று விடுகின்றன. கீழுள்ள படம் CDCயால் வெளியிடப்படுவது
அப்படி தோலை துளைத்து செல்லும் செர்காரியாக்கள் உடலினுள் சென்ற வுடன் சிஷ்டோசோமாக மாறி, அதன் பிறகு ஆன் புழுவாகவும், பெண் புழுவாகவும் மாறி (சில வகை புழுக்கள்) சிறுநீர்ப்பையிலும், (சில வகைப்புழுக்கள்) உணவுபாதையின் சிரைகளிலும் இருந்து கொண்டு முட்டையிடுகின்றன. இந்த முட்டையானது மலத்திலும், சிறுநீரிலும் வெளிவருகிறது.இந்த புழுவை உடலில் கொண்ட ஒருவர் ஆற்றில் நின்று கொண்டே மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர்கழித்தாலோ அந்த நீரில் அந்த முட்டைகள் வந்து விடும். பின் அவை மிராசிடியமாக மாறி நத்தைக்குள் சென்று செர்காரியாவாக மாறி அடுத்து வருபவரின் தோலை துளைத்து மீண்டும் மீண்டும் இதே தான் நடக்கும்இப்பொழுது காலராவிற்கும் இந்த நோயிற்கும் வேறு பாடு தெரிகிறதாஒரு நீரில் காலரா கிருமி இருந்தால் உங்களுக்கு காலரா வர நீங்கள் அந்த நீரைப்பருக வேண்டும். இங்கோ அந்த தண்ணீரில் நின்றால் கூடப்போதும் [ஆத்தாடி :( ]ஆனால் அந்த நீரில் அந்த வகை நத்தை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நத்தை இல்லையென்றால் இந்த நோய் பரவாதுஇப்படி ஒரு நோய் நல்ல வேளை தமிழகத்தில் இல்லை. ஆனால் இதைப்போன்ற ஒரு நோயை பாடுபட்டு வெற்றிகரமாக நம் ஊரிலிருந்து “விரட்டி” விட்டோம். அது தான் நரம்பு சிலந்திஇந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளையும் வாசிக்க

* 15 - சமூக மருத்துவம் - நீரினால் பரவும் பிணிகள் Water Dispersed Diseases
Posted: 2008-10-26 20:01:23 UTC-07:00
முன்னுரை வாசிக்க * 14. சமூக மருத்துவம் - நீரும் நோய்களும் - நீரினால் ஏற்படும் நோய்கள் யாவைநீரினால் பரவும் பிணிகள். (Water Dispersed Diseases)இவ்வகை பிணிகளை பரப்பும் கிருகிகள் நீர் மூலம் பரவுகின்றன. இவ்வகை பிணிகள் பரவுவதற்கு முக்கிய காரணம், மனித மலம் குடிநீரில் கலந்து விடுவது தான்உதாரணமாக ஒருவரின் வயிற்றில் (உணவுப்பாதையில்) காலரா நுண்ணுயிரி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அங்கு பல்கி பெருகுகிறது. அவர் காலராவால் பாதிக்கப்படுகிறார். அதே நுண்ணுயிரி அவரது மலத்தில் வெளியேறுகிறது. அந்த நுண்ணுயிரி எதாவது ஒரு வகையில் அடுத்த நபரின் உணவு பாதைக்குள் சென்றால் தான் அடுத்த நபர் பாதிப்படைவார்அடுத்தவரின் உணவு பாதைக்குள் காலரா நுண்ணுயிரி எப்படி செல்ல முடியும். அவர் அருந்தும் உணவிலோ அல்லது பருகும் நீரிலோ கலந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.ஆக ஒருவரின் மலம் ஏதோ ஒரு வகையில் அடுத்தவர் உண்ணும் உணவில் / பருகும் நீரில் கலந்தால் பிரச்சனை. இது எப்படி நடக்கலாம்
சமையல்காரருக்கு / உணவு பரிமாறுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்து அவர் ஒழுங்காக கை கழுவாவிட்டால்
குடிநீர் விநியோக குழாய்களில் சாக்கடை நீர் கலந்தால். (மழைக்காலங்களில் நடப்பது இது தான்)
செப்டிக் டேங்கை சுத்தப்படுத்திய பின் அந்த கழிவுகளை உரமாக பயண்படுத்தி (இது பல இடங்களில் நடப்பது தான்) அதில் விளையும் தானியங்களை அல்லது காய்கறிகளை ஒழுங்காக கழுவாவிட்டால்காலரா மட்டுமல்ல, டைபாய்டு, போலியோ, கல்லீரல் அழற்சி வகை A (Hepatitis Virus Type A) போன்ற பல நோய்கள் இப்படி தான் பரவுகின்றனஇதைத்தான் ஆங்கிலத்தில் feco oral transmission என்று கூறுகிறார்கள்இதில் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற பிணிகள் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை
வருடத்திற்கு 16 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கிறார்கள்
காலராவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்களின் விபரம்
வருடம்
பாதிக்கப்பட்டவர்கள்
மரணமடைந்தவர்கள்
சதவிதம்
1961
62000
30560
49.3
1971
176000
26048
14.8
1981
51000
2448
4.8
1991
595000
19040
3.2
2000
137000
4908
3.6
2003
112000
1894
1.69
2005
131000
2272
1.7250 வருடங்களுக்கு முன்னால் காலராவால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இறந்து விடும் அளவு நம் நிலைமை இருந்தது. ஆனால் இன்று மருத்துவம் முன்னேறியபின் அது நூறில் இருவர் என்று வந்திருக்கிறதை பாருங்கள். இது நவீன மருத்துவத்தின் சாதனை.சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். 1961ல் 62000 பேர் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் 2005ல் 131000. இது முன்னேற்றமா அல்லது பின்னடைவா என்ற சந்தேகம் எழுவது இயற்கைதான்
1960ல் மக்கள் தொகை எவ்வளவு. இன்று எவ்வளவு
அதில் எத்தனை சதவித மக்கள் நகரங்களில் வசித்தார்கள்
அதில் எத்தனை பிணிகள் பதியப்பட்டன
அதில் எத்தனை மரணங்கள் பதியப்பட்டன என்று சிந்தித்தால் உங்களுக்கே விடை தெரியும்இது போன்ற நீரினால் பரவும் நோய்களை தடுக்கும் வழிகள்
மலம் குடிநீரில் கலக்காமல் தடுப்பது - திறந்த வெளிகளில் மலம் கழிக்காமல் இருப்பது. அனைவரும் நவீன கழிவறைகளை உபயோகிப்பது. இதனால் தான் அரசு கழிவறை கட்ட நிதியுதவி அளிக்கும் திட்டமெல்லாம் வைத்திருக்கிறது - வருவாய் துறை அல்லது ஊரக வளர்ச்சி துறையின் பணி இது
கழிவு நீரும் குடிநீரும் கலக்காமல் தடுப்பது - குடிநீர் வடிகால் வாரியத்தின் பணி
நீரில் குளோரின் கலப்பது - மாநகராட்சி / குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி. உங்கள் பகுதியில் இருக்கும் மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் தினமும் குளோரின் கலக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ?? அந்த குறைந்த பட்சம் வாரம் ஒரு முறை
நீரை காய்ச்சி, வடிகட்டி பருகுவது - நீங்கள் செய்யவேண்டியது
கைகளை நன்றாக கழுவ வேண்டியது – இதுவும் நீங்கள் செய்ய வேண்டியதுதான் இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் – இந்த வகை நோய்களை முழுவதும் தடுக்க அரசால் மட்டுமே முடியாது. உங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறதுஇந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளை வாசிக்க

* 14. சமூக மருத்துவம் - நீரும் நோய்களும் - நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை
Posted: 2008-10-26 20:01:23 UTC-07:00
நீரினால் ஏற்படும் நோய்கள் இவைதான் என்று நீங்கள் நினைப்பதை விடஇந்த பட்டியல் பெரிது !!நீரினால் ஏற்படும் நோய்களை (Water borne diseases) நான்கு வகையாக பிரிக்கலாம்
Water Dispersed Diseases Borne - நீரினால் பரவும் பிணிகள். (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) உதாரனம் காலரா
Water Based Diseases - நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் : (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) இந்த நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். A part of the life cycle of the organism causing this disease is in water - உதாரணம்: நரம்புச்சிலந்தி
Water related Diseases - நீருடன் தொடர்புடைய பிணிகள் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) - இந்த நோயை பரப்பும் கிருமி இருக்கும் / வளரும் பூச்சிகள் நீரில் இருப்பதால் (Insect Vector Breeds in Water) உதாரணம் மலேரியா, சிக்குன்குனியா
Water Washed Diseases- நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) -தண்ணீர் பற்றாக்குறையால் தனிமனித சுகாதாரம் பேண முடியாததால் ஏற்படும் நோய்கள் . உதாரணங்கள் - Trachoma, Scabies, Typhus, Ring worm (படர்தாமரை)இதில் முக்கியமான விஷயம், பல (பழைய) புத்தகங்களில் water borne diseases மற்றும் water dispersed diseases இரண்டு பதங்களும் ஒரே அர்த்ததில் கூறப்பட்டிருக்கும். சில (புதிய) புத்தகங்கள் தான் water dispersed diseases என்ற தனிப்பதத்தை பயன்படுத்து கின்றன. அதாவது இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர், உலாவி போல். இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு உலாவி என்றாலும் உலாவி என்றால் அது இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமல்லவே. அது போல் நீரினால் பரவும் நோய்கள் எல்லாம் நீரினால் ஏற்படும் நோய்கள் என்றாலும், நீரினால் ஏற்படும் நோய்கள் என்றால் அது நீரினால் பரவும் நோய்கள் மட்டுமல்ல. (All water dispersed diseases are water borne diseases but not all water borne diseases are water dispersed diseased)இதில் முக்கிய விஷயம், பொது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கும், ஏன் சில அதிகாரிகளுக்கும் கூட நீரினால் ஏற்படும் நோய்கள் என்றால் அதில் நீரினால் பரவும் நோய்களை தவிர மேலும் மூன்று வகைகள் இருக்கின்றன என்று தெரியாதுஅதனால் தான் முதல்வகை நோய்களுக்கு (காலரா பரவாமல் தடுக்க) அளிக்கப்படும் முக்கியத்துவம் பிற நோய்களுக்கு அளிக்கப்படுவதில்லைதண்ணீரில் குளோரின் கலந்தால் அல்லது தண்ணீரை காய்ச்சி குடித்தாலே அதன் மூலம் நீரினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என்ற மாயையில் தான் இங்கு பலரும் இயங்குகிறார்கள்.இதில் ஒவ்வொரு வகை நோய்களை குறித்தும் அதிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாக்க செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தொடர்ந்து என்ன எழுத வேண்டும் என்று கூறினால் அது குறித்து விபரமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) அடுத்த இடுகைகளை வாசிக்க

* 13. சினிமா - கேள்வி பதில் தொடர்விளையாட்டு
Posted: 2008-10-26 19:55:59 UTC-07:00
என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த தமிழ் பதிவுலக சினிமா ஆவணக்காப்பகம் / நூலகம் பதிவர் முரளிக்கண்ணனுக்கும் பதிவர் அக்னி சிறகும், பதிவர் இளையபல்லவனுக்கும் பதிவர் டோண்டு ராகவன் அவர்களுக்கும் நன்றிகள். போன் வாரமே எழுத ஆரம்பித்தது நட்சத்திர வாரம் வெளியிடலாம் என்பதால் ஒரு தாமத வெளியிடு
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?எந்த வயது என்று சரியாக ஞாபகம் இல்லை. கொஞ்சம் யோசித்து பார்த்தால் சிறு வயதில் பார்த்த படங்கள் சில ஞாபகத்தில் இருக்கின்றன
ஆத்தூரில் பட்டணத்தில் பூதம். மண் தரையில் அமர்ந்து பார்த்த ஞாபகம்
தூத்துக்குடியில் விக்ரம் (கூடவே பிரதமர் இந்திரா காந்தி பற்றிய ஆவணப்படமும் பார்த்ததாக ஞாபகம்)
காரனேஷன் திரையரங்கில் “எங்களையும் வாழ விடுங்கள்” (என்று நினைக்கிறேன். குரங்குகளை வைத்து எடுத்த படம்)எது முதலில் பார்த்தது என்று ஞாபகம் இல்லை. முரளி கண்ணன் சார் முதலில் வெளிவந்த படம் என்னவென்று சொல்வார் என்று நினைக்கிறேன்
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?ச-ரோ-ஜாஆங்கிலம் - இண்டியானா ஜோன்ஸ் (Indiana Jones and the Kingdom of the Crystal Skull )
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, சில நாட்களுக்கு முன்னர் டிவிடியில்
ஊரைத்தெரிஞ்சிக்கிட்டேன்
காசேதான் கடவுளடா
எங்கே, அறையில் தான் என்ன உணர்ந்தீர்கள்? திரைக்கதைக்கு அந்தக்காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இக்கால இயக்குனர்கள் ஆங்கில படங்களை மட்டும் பார்க்காமல் பழைய தமிழ் படங்களையும் பார்த்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதும் தெரிந்தது
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
2002 பிப்ரவரியில் பார்த்த - கண்ணத்தில் முத்தமிட்டால்
2003 மே மாதத்தில் பார்த்த - அன்பே சிவம்
2003 டிசம்பரில் பார்த்த - இயற்கை கண்ணத்தில் முத்தமிட்டால்2002 பிப்ரவரி 14ஆம் தேதி அந்த ப்டம் வெளியிடப்பட்டது என்று நினைக்கிறேன். அப்பொழுது எங்கள் வகுப்பு மருத்துவக்கல்லூரி இளங்கலை (MBBS) படிப்பை முடித்து பதிவு செய்து விட்டு வந்திருந்தோம். எங்களுக்கு அடுத்த வகுப்பு மாண்வர்களுக்கு தேர்வு முடிவு வந்த நேரம் என்று ஒரு பெரிய கும்பலே பயங்கர உற்சாக திருநெல்வேலி பாம்பே திரையரங்கிற்கு சென்றது.அதற்கு முன் 2000ல் வந்த மணிரத்னம் படம் அலைபாயுதே காதல் கதை என்பதும், அப்பொழுது உச்சத்தில் இருந்த சிம்ரனும் மாதவனும் நடித்த படம் என்பதும் பிப்ரவரி 14 ரீலிஸ் என்பதால் கல்லூரி கூட்டத்தின் உற்சாகத்திற்கு குறைவில்லைபடம் ஆரம்பித்த போது இருந்த ஊ ஊ, ஏ, ஓ கூப்பாடுகள் சில நிமிடங்களிலேயே அடங்கி “அடப்பாவி உயிரே போலிருக்கு” என்ற சில கருத்து பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது.(உயிரே அலையாயுதேவிற்கு முன்னர் 1998ல் வந்த மணிரத்னம் படம்)மேலும் சில நேரம் கழித்து அரங்கம் முழுவது நிசப்தம்தூத்துக்குடி மாவட்ட பள்ளிகூடங்களில் இலங்கை தமிழர்கள் படிப்பது வழக்கம். அவர்கள் உபயோகிக்கும் பேனா மற்றும் பிற பொருட்களையும், விடுமுறைக்கும் இலங்கைக்கு விமானத்தில் சென்று வருவதையும் பார்த்த எங்களுக்கு அங்கு இருக்கும் அனைவரும் வசதியானவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது. (உயிரை பணயம் வைத்து தோனியில் வருபவர்களையும், இங்குள்ள முகாம்களின் நிலையும் எனக்கு மாணவ நாட்களின் தெரிந்திருக்க வில்லை) என்னுடம் படம் பார்த்த பலரும் அதே நினைப்புடன் தான் படத்திற்கு வந்திருக்க வேண்டும். அவர்களும் யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்த அதிர்ச்சியில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் கன்னத்தில் அறைசாத்தியது நிஜம்வழக்கமாக இடைவேளை வந்த உடன் அவசரமாக வெளியில் ஓடி முதலில் பாப்கார்ன் வாங்கும் அவசரத்தில் ஓடுபவர்கள் கூட அரண்டு போய் அமர்ந்திருந்தார்கள்அந்த ப்டம் குறித்து பல விமர்சணங்கள் இருக்கலாம். உதாரணமாக சுதந்திர போராட்டத்தை கொச்சை படுத்தும் சுஜாதாவின் வசனங்கள்ஆனால் தமிழகத்தில் ஈழ்ப்பிரச்சனை குறித்த புரிதல் / ஆர்வம் இல்லாதவர்களை கூட அந்த பக்கம் திருப்பிய படம் அது. பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா என்ற வரிகளின் பின்னிருக்கும் வலி நீண்ட நாட்களுக்கு மனதை விட்டு அகல் வில்லை இந்த படத்தின் மற்றொரு பாடலான வெள்ளைப்பூக்கள் மிகச்சிறந்த பாடல். தேசிய விருது பெற்ற பாடல் என்று நினைக்கிறேன். நேர்மறை எண்ணங்களையும் சுபிட்சத்தையும் வேண்டும் வரிகள்
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவேவிடியும் பூமி அமைதிக்காக விடியவேமண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவேமலரே சோம்பல் முறித்து எழுகவேகுழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்காற்றின் பேரிசையும் - மழை பாடும் பாடல்களும்ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோகோடி கீர்த்தனமும் - கவி கோர்த்த வார்த்தைகளும்துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ எங்கு சிறு குழந்தை - தன் கைகள் நீட்டிடுமோஅங்கு தோன்றாயோ கொள்ளை நிலவேஎங்கு மனித இனம் - போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்குகூவாயோ வெள்ளை குயிலே.
பாடல் வரிகள் ஆயில்யன் அவர்களின் பதிவில் இருந்து (அவரது அனுமதியின்றி !!) எடுக்கப்பட்டது. அவருக்கு நன்றி :) :)
மாதவன் சிம்ரன் காதல் காட்சிகள் மிக எதார்த்தமாக இருக்கும். அதிலும் அந்த குழந்தையை தத்து எடுக்கும் காட்சி “டாப் க்ளாஸ்” குழந்தையின் வளர்ப்பு தாத்தா தான் அந்த குழந்தை பிறந்த போது அந்த முகாமில் இருந்த அதிகாரி என்பதை எத்தனை கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.சமாதானத்தின் விலை அல்லது மதிப்பு என்னவென்று தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்அன்பே சிவம் : இது குறித்து தனி இடுகை எழுதியிருக்கிறேன் * 12.சினிமா - அன்பே சிவம், அன்பு, கடவுள், பொதுவுடமை, தொழிற்சங்கம் - இங்கு சுட்டினால் அங்கு செல்லலாம்இயற்கை குறித்து பின்னர் எழுதுகிறேன்
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?தங்கர்பச்சன் மன்னிப்பு கேட்டது. நடிகையின் கதை எழுதியவரை கூட விட்டு விட்டு தங்கர்பச்சனை பிடித்துகொண்டது ஏன் ?? பதில் (ஞாநி பாணியில்) உங்களுக்கே உங்களுக்கு)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?பல
தசாவதாரத்தில் இறுதியில் ப்ளெட்சர், நரஹசி, கோவிந்த சண்டையிடும் காட்சிகள். இது குறித்து நான் ஏற்கனவே எழுதியது ்இறுதியில் வரும் ப்ளெட்சர் - ஜப்பானியர் சண்டை அற்புதம். ஒரே நடிகர் மூன்று வேடங்களில் நடித்து , அந்த மூவரும் சண்டையிடுவது, அதுவும் மூவரும் மூன்று முறைகளில் (ஜப்பானியர் -கராத்தே, ப்ளெட்சர் - தொழில் முறையில், கோவிந்து - சண்டை பற்றி எதுவும் தெரியாமல் சும்மா முரட்டுதனமாக) என்பது எளிதான விஷயம் அல்ல. கமல் இக்கதாபாத்திரத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.
நியூ - படத்தின் ஒளியமைப்பு
பாய்ஸ் படத்தில் “எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேண்டும் பாடலில்” கடற்கரை காலை முதல் மாலை வரை எப்படி இருக்கிறது என்று காட்டும் ஒரு காட்சி. மற்றும் அலை அலை பாடல்
பாரதி - கிராபிக்ஸ் என்று தெரியாமல் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படம்
அலைபாயுதே பாடல்கள் - முக்கியமாக எவனோ ஒருவன் வாசிக்கிறான் மற்றும் பச்சை நிறமே, காதல் சடுகுடு
முதல்வன் பட பாடல்கள்
ஜீன்ஸ் - அதில் இரண்டு நாசர் வரும் காட்சிகளில் பயன் படுத்தப்பட்டிருக்கும் தொழிற்நுட்பம் இரண்டு பிரசாந்த் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருகும் தொழிற்நுட்பத்தை விட நுட்பமானது என்று பலருக்கு தெரியாது.
சிறைச்சாலை - ஒலி, ஒளி, கலை, இசை என்று அனைத்துமே
ஆளவந்தான் - வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இரு “துரத்தும்” காட்சிகள் கூட sync ஆவது என்று பல இருக்கிறது
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?உண்டு. குமுதம், விகடன், நக்கீரன், தினத்தந்தியில் வரும் சுவடுகள் மற்றும் வாழு வாழ விடு
7.தமிழ்ச்சினிமா இசை?என்னைக்கவர்ந்த இசையமைப்பாளர்கள் என்றால் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், மரகதமணி, என்று பெரிய பட்டியலே உள்ளது.
இந்தி இசையை கேட்ட தமிழர்களை தமிழ் இசை கேட்க வைத்தவர் இளையராஜா
ஆனால் இந்தி இசை கேட்ட இந்தியர்களை கூட தமிழ் இசை கேட்க வைத்தது ஏ.ஆர்.ரஹ்மான்
அழகன், வானமே எல்லை போன்ற படங்களில் கலக்கியவர் மரகதமணி
அன்பேசிவம், இயற்கை என்று கலக்கியவர் வித்யாசாகர்
லேசா லேசா, காக்க காக்க, சாமி என்று ஹாரிஸ் ஜெயராஜ் படங்கள் என்று பெரிய பட்டியலே இருக்கிறது8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?இல்லை. இந்த வருடம் பார்த்த ஆங்கில படங்கள் என்று பார்த்தால் இண்டியானா ஜோன்ஸ், 10000 BC. அதற்கு முன்னர் பார்த்த படங்கள் காட்சில்லா, இண்டிபெண்டென்ஸ் டே, டைடானிக், ஜூராசிக் பார்க, டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர், என்று இது வரை பார்த்த ஆங்கில படங்கள் 20 கூட தாண்டாதுபிற இந்திய மொழிகளில் (சப் டைடல்களுடன்) பார்த்த கடைசி படம் - சிபிஐ டைரி குறிப்பு. ஏனோ ஆங்கில புதினங்களை வாசிக்கும் ஆர்வம் படங்களை பார்ப்ப்தில் இல்லை
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?இல்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?சப் டைடில்களுடன் இணையத்தில் பரவும் படங்களில் தரமான படங்களும் இருந்தால் உலகம் முழுவதும் தமிழ் திரைத்துறை பெயர் பெற வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?எனக்கு அவ்வளவு வித்தியாசம் கிடையாது.தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகாது. பழைய படங்களை பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.அப்பவும் ரஜின் கட்சி ஆரம்பிப்பாரா என்று ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்துவார்கள்கீழ்க்கண்டவர்கள் இதே கேள்விகளுக்கு தங்கள் மலரும் நினைவுகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் ரூத்ரன்
sureஷ்
சே.வேங்கடசுப்ரமணியன்.
ரத்னேஷ்
பத்ரி
பிரகாஷ்
ரவிசங்கர்
நர்சிம்,
உண்மைத்தமிழன்,
சுரேகா,
புதுகை அப்துல்லா,

* 12.சினிமா - அன்பே சிவம், அன்பு, கடவுள், பொதுவுடமை, தொழிற்சங்கம்
Posted: 2009-02-09 10:21:47 UTC-08:00
தோழர்கள் (”கம்யூனிஸ்ட்கள்” ) பற்றி பொதுவில் இருக்கும் எண்ணம் என்ன
வேலை நிறுத்தம் செய்பவர்கள்,
தேவையில்லாத பிரச்சனை செய்பவர்கள்
பிணியாளர் ஊர்தியில் நோயாளியை ஏற்ற 1000 ரூபாய் கேட்கும் ஓட்டுனர் அல்லது அறுவை சிகிச்சை முடிந்த பின் மருத்துவரின் பெயரை சொல்லி 500 ரூபாய் வாங்கும் (இந்த சமூக விரோதிகளினால் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் கெட்ட பெயர்) அறுவை அரங்க ஊழியர் ஆகியோரின் மேல் நடவடிக்கை எடுத்தால் அங்கு வந்து வேலைநிறுத்தம் செய்வோம் என்று மிரட்டுபவர்கள்
தொழிற்சங்க பிரதிநிதி என்ற போர்வையில் ஒரு நாள் கூட வேலைக்கு வராமல் 30ஆம் தேதி சரியாக வந்து மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் (தானியங்கி பணம் வழங்கியில் (ATM) ஊதியம் வழங்கப்படும் நடைமுறை வந்த பின் இவர்கள் அந்த ஒரு நாள் கூட அலுவலகம் வருவதில்லை)
அரசு ஊதியம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வராமல் சங்க பணிக்கு செல்கிறேன் என்று சொந்த பணி (வாடகை வாகனம், பிரதியகம் (xerox shop), பொது தொலைபேசி நிலையம், நிலத்தரகு) பார்ப்பவர்கள்
கடவுள் எதிர்ப்பாளர்கள். எனக்கு கூட அப்படித்தான் எண்ணம் இருந்தது. இப்படி எண்ணத்துடன் அன்பே சிவம் பார்த்த எனக்கும் இதே போன்ற எண்ணத்துடன் இருந்தவர்களுக்கும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது ஊகிக்கக்கூடியதேகம்யூனிசம் என்பது இந்தியாவில் நடக்கும் கூத்துக்களான
வேலை நிறுத்தம்
மிரட்டல்
அடுத்தவரை சுரண்டுவது (அதாவது முதலாளித்துவம் என்பது முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுவது என்றால் கம்யூனிஸம் என்பது தொழிற்சங்க தலைவர்களும் செயலாளர்களும் பிற சாதாரண ஊழியர்களை சுரண்டுவது)
அடுத்தவரை திட்டுவது (அடுத்தவர் என்பதில் முதலிடம் அடுத்த (சகோதர) கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சங்கத்தினர்தான். முதலாளிகளை திட்டுவதை விட அடுத்த சங்கத்தினரை தான் தோழர்கள் அதிகம் திட்டுவதை பார்த்திருக்கிறேன்)
கட்டாய வசூல்
ஊழியர்களிடம் பணம் பெற்று பணியிட மாறுதல்போன்றவற்றை எல்லாம் தாண்டியது என்பதை எனக்கு முதலில் உணர்த்தியது அந்த படம் தான். அதன் பிறகு பொதுவுடமை தொடர்பான புத்தகங்களை தேடி தேடி படித்தாலும், அவை அனைத்திலும் இருக்கும் மையக்கருத்தை அன்பே சிவம் மிக எளிமையாக வெளிப்படுத்துகிறது. தோழர் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (ஆசிரியர் கண்ணதாசன் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) மற்றும் நக்கீரன் மற்றும் இதர பதிப்பகத்தினரின் சில புத்தகங்கள் என்று பொதுவுடமை பற்றிய புரிதலுக்கு முதல்படி அந்த படம் தான்.சிறிய கதை, மற்றும் தெளிவான சிறுகதை
தொழிலாளர்களுக்காக போராடுபவர் நல்லசிவம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்யும் அன்பரசு. (ஒருவரில் பெயரின் அன்பும் அடுத்தவரின் பெயரில் சிவமும் இருப்பதை கவனிக்க வேண்டும்) . இயற்கை சீற்றத்தால் அவர்கள் செல்ல வேண்டிய விமான பயணம் தடைபடுவதால் அவர்கள் இருவரும் காடு மேடு எல்லாம் தாண்டி கடைசியில் சென்னை வருகிறார்கள்
புவனேஷ்வரில் முதலாளித்துவம் பேசும் அன்பரசு மனதில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் திரைக்கதை அமைத்து பாராட்டுக்குரியது.
அதிலும் வசனங்கள் ஒவ்வொன்றும் சிரிக்க, சிந்திக்க, ரசிக்க வைப்பவை. தொடர்வண்டி எப்பொழுது வரும் என்ற கேள்விக்கு ”டூ டு டூ டு டூ டூ” என்ற பதிலை (two to two to two two - 1:58 to 2:02) மறக்க முடியுமா
கமல் விளையாட்டு பொருட்கள் வாங்குவது யாருக்கு என்று தெரிந்த போது மாதவன் முகத்தில் தோன்றும் எண்ணங்கள் அட்டகாசம். இவ்வளவு சிறந்த நடிகர் ஏன் 2003க்கு பிறகு சோபிக்க வில்லை என்பது புரியாத புதிர் தான்
குருதிகொடை அளிக்க தயங்கும் மாதவன் பேசும் வசனங்களும், நடக்கும் விதமும் தினமும் அரசு மருத்துவமனைகளின் குருதி வங்கியின் முன்னால் நடக்கும் கூத்துக்கள் தான்.
நல்லசிவம் முன்னர் ஒரு பெண்ணை காதலித்ததும், அந்த பெண்ணின் தந்தை தொழிலாளர்களுக்கு எதிராக இருந்ததும், விபத்தில் அவர் பாதிக்கப்பட்டதும், அதன் பிறகு மாதவன் அதே பெண்ணை மணமுடிப்பதும் துனைக்கதை.
அடுத்தவரின் துயரில் பங்கு கொள்வது, அனைவரையும் நேசிப்பதும், தன்னால் முயன்ற வரை யில் அடுத்தவருக்கும் உதவுது தான் கம்யூணிஸத்தின் அடிநாதம் என்ற புரிதல் அந்த படத்தில் ஏற்பட்டது. படத்தின் தலைப்பே “அன்புதான் கடவுள்” என்று கூறுகிறது
எந்த போராட்டம் என்றாலும் “யாராவது போராடட்டும், நாம் நோகாமல் நொங்கு தின்னலாம்” என்ற எண்ணத்தில் இருப்பவர்களை சாடும் வகையில் வரும் ஒரு பாடல் என்னைக்கவர்ந்தது
இப்படத்தில் கமலின் உழைப்பை அளவிட முடியாது.
ஒரு காட்சியில் கமல் தரையில் படுத்திருப்பார். இரண்டு கால்களும் வேறு நீளத்தில் இருக்கும். என்னைக்கவர்ந்த காட்சி அது. உடல் ஊனமான பாத்திரங்களில் பலர் நடித்திருக்கலாம். ஆனால் படுக்கும் ஒரு காட்சியில் கூட இரு கால்களையும் வேறு நீளத்தில் இருக்கும் படி காட்டியது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அதே போல் 2003ல் சுனாமி பற்றிய வசனங்கள் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்பதும் கேள்விக்குறிதான்.
என்னைப்பொருத்த்வரையில் சிறந்த தமிழ் திரைப்படம் எதுவென்றால் “அன்பே சிவம்” என்று தயங்காமல் கூறிவிடுவேன். சில படங்கள் ஒரு Time Wrapல் இருக்கும். உதாரணமாக மௌன ராகம் படத்தை இப்பொழுது பார்த்தால் அது 80களில் வந்த படம் என்று தெரியும். தேவர் மகன் போன்ற படங்களை இப்பொழுது பார்த்தால் அவை classic ஆகி விடுகிறது. ஆனால் அன்பே சிவம் இன்று கூட contemporary ஆகத்தான் இருக்கிறது. இன்று வரை contemporary ஆக இருக்கும் மற்றொரு படம் பேசும்படம். (இது contemporary மற்றும் classic ஆகியவற்றிற்கு நான் வைத்திருக்கும் நிர்ணயவிதிகள்)
வித்யாசாகரின் சிறந்த படம் என்று இதை கூறலாம். இந்த படத்தில் அவரின் பாடல்களும் பிண்ணனி இசையும் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. இளையராஜா செய்திருந்தால் கூட இவ்வளவு தான் செய்திருக்க முடியும் என்ற வகையில் காட்சியமைப்புகளுக்கு ஏற்ற பிண்ணனி இசையும், அனைத்து வகையான பாடல்களும் என்று ராஜாவும் ரஹ்மானும் தங்களின் படைப்புத்திறனின் உச்சத்தில் இருந்த போது தந்த படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் அன்பே சிவத்தின் இசை இருந்தது. தான் ஒரு “ஒரு திரைப்பட மாயை” அல்ல என்பதை இயற்கை மூலம் மறுபடியும் அதே வருடம் நிருபித்தார். அதன் பின்னர் இந்த அளவு முழுமையான இசையை அவர் வேறு எந்த ப்டத்திலும் அளித்ததாக தெரியவில்லை (ரா ரா ஒரே படல் மட்டும் விதிவிலக்கு)
அதே போல் மாதவனின் சிறந்த படம் என்றாலும் இந்த படத்தை கூறலாம். (சுந்தர் சிக்கும் அஃதே)
சிறிது யோசித்ததில் “தன்னைப்போல் பிறரையும் நேசி” என்று கூறி ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தவர் தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்று எனக்கு புரிந்தது இந்த படத்தின் வெற்றியா தோல்வியா என்று உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்
படம் வணிக ரீதியாக தசாவதாரம் போல் வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். படத்தை பற்றி அறிவு ஜீவிகள் எப்படி வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளலாம். ஆனால் பொதுவுடமை, தொழிற்சங்கம் போன்றவற்றை பற்றிய தவறான எண்ணம் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து தவறான பிம்பத்தை வைத்திருக்கும் ஒரு தலைமுறைக்கும் “கம்யூனிஸ்சம் என்பது அடுத்தவரை நேசிப்பதே” என்று புரிய வைத்ததில் கமல் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்
முதலாளித்துவம் பேசுபவர்கள் மட்டுமல்ல, கம்யூணிஸ்ட் என்ற பெயரில் அலப்பரை செய்து வரும் சிலரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.

FeedBurner delivers the world's subscriptions wherever they need to go. Publish a feed for text or podcasting? You should try FeedBurner today.

Subscribe to:
Comments (Atom)